அப்பாவுக்கே துரோகம் பண்ணியே! அதான் விஜய் உன்ன கூப்பிடலை! பாமக அன்புமணிக்கு ராமதாஸ் அட்வைஸ்!
அரசியலில் வளர்த்துவிட்ட தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணி தனக்கு துரோகம் செய்ய மாட்டாறா என்ற எண்ணத்தில் தான் விஜய் அழைக்கவில்லை என ராமதாஸ் கூறினார்.
சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன் மகன் அன்புமணி ராமதாஸை நேரடியாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் தன் பதிவில், “அன்புமணி இங்கு ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் திருமாவளவனுக்கு விஜய் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நான்கு எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் உனக்கு ஏன் கொடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “தன்னை அரசியலில் ஆளாக்கி, ஒரு இயக்கத்தின் தலைவனாக வளர்த்த தந்தைக்கே துரோகம் செய்த அன்புமணி, தனக்குப் பின்னால் துரோகம் செய்ய மாட்டானா என்ற கேள்வியோடுதான் விஜய் உன்னை அழைக்கவில்லை. இந்தச் சூட்சுமம் இங்குதான் ஒளிந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: என் போட்டோ போடாதீங்க! அன்புமணிக்கு கறார்! மீண்டும் கோர்ட் படியேறிய ராமதாஸ்!
“இதைப் புரிந்துகொள். வாழ்க்கையில் வளர்ந்துகொள் அன்புமணி” என உணர்ச்சிபூர்வமாக முடித்துள்ளார்.
அன்புமணி இங்கு ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் "விஜய்" ரெண்டு MLA வச்சிருக்க கும் திருமாவளவனுக்கு கொடுக்க முக்கியத்துவத்தை நான்கு MLA வைத்திருக்கும் அன்புமணிக்கு கொடுக்காததன் பின்னணி என்ன?
— Doctor Ramadoss OG (@DoctorRamadoss) May 8, 2026
இங்குதான் அந்த சூட்சுமம் இருக்கு தன்னை அரசியலில் ஆளாக்கி தன்னை ஒரு இயக்கத்தின்…
தேர்தல் முடிவுகளுக்குப் பின் த.வெ.க., ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், பா.ம.க.வுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என அக்கட்சியினர் ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ம.க. நிறுவனரே தன் மகனை நேரடியாக விமர்சித்திருப்பது கட்சிக்குள் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ராமதாஸின் இந்தப் பதிவு, தந்தை-மகன் இடையேயான உறவு முறிவை வெளிப்படுத்துவதாகவும், அரசியல் குடும்பங்களில் நம்பிக்கை பிரச்னை எப்படி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது தமிழக அரசியல் சூழலில் த.வெ.க.,வின் ஆதரவு தேடல் நடைபெறும் வேளையில், பா.ம.க.வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். ராமதாஸின் கடுமையான வார்த்தைகள் அன்புமணி அரசியல் பாதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதும் ஆர்வத்துக்குரியதாக உள்ளது.
இதையும் படிங்க: மாம்பழம் சின்னம் வழக்கு!! ராமதாஸுக்கு தொடர் சறுக்கல்!! மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!