விஜய் ஜீரோ!! தனியா நின்னா மதிப்பில்லை! அரசியல் அனுபவம் பத்தாது!! விளாசும் தமிழிசை!!
தவெக தலைவர் விஜய் திரைத்துறையில் இருந்து வந்த உடனே முதல்-அமைச்சர் ஆவது கடினம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யைப் பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழிசை, "தம்பி விஜய்க்கு கொஞ்சம் அனுபவம் பத்தாது. திரைத்துறையிலிருந்து வந்த உடனே முதலமைச்சர் ஆவது கடினம்" என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழிசை சவுந்தரராஜன் தனது உரையில், "தனித்து விடப்பட்டதால் அதிமுக சரணடைந்ததாக பேசுகிறாரா என தெரியவில்லை. ஒரு சின்ன தம்பி பேசுவதாக தான் நான் பார்க்கிறேன். விஜய் பேசுவதால் தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்துபோய்விடாது. நாங்கள் வெற்றி பெறுவோம். திமுக மற்றும் என்டிஏ இடையேதான் போட்டி. விஜய் ஜீரோ மாதிரி; ஜீரோ தனியாக இருந்தால் மதிப்பில்லை; இன்னொரு எண்ணுடன் இருந்தால்தான் வேல்யூ" என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: கணக்கு போட்டு காத்திருக்கும் விஜய்!! தைலாபுரம் - தேமுதிக நிலைப்பாடு என்ன? ராமதாஸ் - பிரேமலதா யாருடன் கூட்டணி?
மேலும், "2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் நிம்மதியாக அரசியல் செய்யலாம். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நினைவில் வைக்க வேண்டும். அரசியலில் அனுபவம் இல்லாததால் விஜய்யுடன் யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை; அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுகிறதோ அந்த கூட்டணிக்கு விஜய் ஆதரவாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
தமிழிசையின் இந்த கருத்து, தவெகவின் தனித்து போட்டியிடும் உத்தியை கடுமையாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. விஜய் அரசியலுக்கு புதியவர், அவருக்கு போதிய அனுபவம் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய தமிழிசை, அவரை "சின்ன தம்பி" என்று குறிப்பிட்டது காங்கிரஸ், திமுக தரப்பில் இருந்து ஆதரவு குரல்களை எழுப்பியுள்ளது.
அதேநேரம், அதிமுக-பாஜக கூட்டணி தரப்பில் இது விஜய்யின் அரசியல் பயணத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தமிழக அரசியலில் விஜய் தனித்து நிற்கும் போக்கு, அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், அனுபவமிக்க அரசியல்வாதிகள் இது கடினம் என்று கூறுவது விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
விஜய்யின் தவெக கட்சி தனித்து போட்டியிடும் என்ற அறிவிப்பு, அரசியல் கட்சிகளிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழிசையின் கருத்து, விஜய்யை ஜீரோவுடன் ஒப்பிட்டது அவரது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தலாம் என்றாலும், அரசியலில் கூட்டணிகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது. 2026 தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய விமர்சனங்கள் தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியை அதிர வைத்த விசில் சப்தம்!! விஜயின் ப்ளான் B! அமித்ஷாவையே அலறவிட்ட தளபதியின் சீக்ரெட்மூவ்!!