டெல்லியை அதிர வைத்த விசில் சப்தம்!! விஜயின் ப்ளான் B! அமித்ஷாவையே அலறவிட்ட தளபதியின் சீக்ரெட்மூவ்!!
இந்தத் தகவல் டெல்லியில் உள்ள பாஜக மேலிடத்தை எட்டியபோது, அங்கு ஒருவித பதற்றம் நிலவியதாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இது வெறும் நிர்வாக நடைமுறை என்று தோன்றினாலும், இதன் பின்னணியில் டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்திய ஒரு பெரிய அரசியல் சதுரங்க ஆட்டம் நடந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் தலைமையிலான தவெக, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு தனித்துவமான சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. விசில், ஆட்டோ ரிக்ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்களின் பட்டியலுடன் மனு அளிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சின்னம் கிடைப்பதில் சந்தேகம் நிலவியது. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் 'கரும்பு விவசாயி' சின்னம் பறிபோனது போல, கடைசி நேரத்தில் தவெகவுக்கும் சின்னம் மறுக்கப்படலாம் என்ற அச்சம் கட்சி வட்டாரத்தில் இருந்தது.
இதையும் படிங்க: சின்னத்தை காட்டக்கூட பயமா? விசிலடிக்கக்கூட பயப்படும் ஜனநாயகன்! இன்னும் ஏன் மௌனம்?!
இந்த சூழலில் தவெக உயர்மட்டத்தில் ஒரு துணிச்சலான 'பிளான் பி' விவாதிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை மறுத்தால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காங்கிரஸின் 'கை' சின்னத்தில் தவெக வேட்பாளர்களை களமிறக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இது காங்கிரஸுக்கு மிகப்பெரிய ஆஃபராக இருக்கும் என்பதால், தவெக தரப்பு இந்த காயை நகர்த்த தயாரானது.
இந்த தகவல் டெல்லியில் உள்ள பாஜக மேலிடத்தை எட்டியபோது அங்கு பதற்றம் ஏற்பட்டது. விஜய்யின் ரசிகர் பட்டாளமும் காங்கிரஸின் தேசிய அடையாளமும் இணைந்தால், தமிழகத்தில் பாஜகவின் "காங்கிரஸ் இல்லாத பாரதம்" என்ற திட்டத்திற்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்படும். வாக்குகள் ஒருங்கிணைந்து, தற்போதைய அரசியல் சமன்பாடுகளைத் தலைகீழாக மாற்றும் என்று கணிக்கப்பட்டது.
இதை உணர்ந்த டெல்லி மேலிடம் சில நகர்வுகளை மேற்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அடுத்த சில நாட்களிலேயே எந்த தடையுமின்றி தவெகவுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டது. விஜய் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம், காங்கிரஸ்-விஜய் மெகா கூட்டணி உருவாவது தற்போதைக்கு தவிர்க்கப்பட்டுள்ளது. இது பாஜகவிற்கு ஒரு சாதகமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
இந்த விசில் சத்தம் தமிழக அரசியல் களத்தில் யாருக்கு வெற்றியைத் தரும், யாருக்கு வேட்டு வைக்கும் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: விஜய் செய்த முக்கிய மாற்றம்!! ஆச்சரியத்தில் தொண்டர்கள்!! தவெக கூட்டத்தில் இதை கவனிச்சீங்களா?