×
 

இது புதுசா இருக்குண்ணே!! புதுசா இருக்கு!! அதிமுக வாக்குறுதிகளை பொம்மைகளாக்கி தங்கமணி பிரசாரம்!

நாமக்கல்லில் தங்கமணியின் புதிய பிரசார யுக்தி: அ.தி.மு.க. வாக்குறுதிகள் பொம்மைகளாக உயிர் பெற்றன!

நாமக்கல்: அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பொம்மைகளாகவும் கட்-அவுட்டுகளாகவும் உருவாக்கி, லாரியில் ஏற்றி தொகுதி முழுவதும் வலம் வரச் செய்து பிரசாரம் செய்யும் புதிய முயற்சியை முன்னாள் அமைச்சர் தங்கமணி மேற்கொண்டுள்ளார். இந்த வித்தியாசமான பிரசாரம் குமாரபாளையம் தொகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நான்காவது முறையாக குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடும் தங்கமணி, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளை கண்ணுக்கு எளிதில் புலப்படும் வகையில் வடிவமைத்துள்ளார். ஒரு பெரிய லாரியில் ஏற்றப்பட்டுள்ள இந்த பொம்மைகள் மற்றும் கட்-அவுட்டுகள் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அதில், அனைவருக்கும் ‘அம்மா’ வீடு, பொங்கல் தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கம், கரும்பு மற்றும் பானை ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டு நடத்துவோருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி, காளையை அடக்கும் வீரர் பொம்மை, கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட் இலவச மின்சாரம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல், கல்விக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்முறை!! டெல்லி தலையீட்டால் இபிஎஸ் - டிடிவி கைகோர்ப்பு! பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்?!

மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முழு உருவ பொம்மைகளும், முருகன் பொம்மையும் இந்த லாரியில் இடம்பெற்றுள்ளன. இந்த பொம்மைகள் மூலம் அ.தி.மு.க.வின் திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக புரியும் வகையில் தங்கமணி வடிவமைத்துள்ளார்.

“வாக்குறுதிகளை வெறும் வார்த்தைகளாக சொல்லாமல், கண்ணால் பார்க்கும் வகையில் கொண்டு வருவதன் மூலம் மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்” என்று தங்கமணி தரப்பில் கூறப்படுகிறது. இந்த புதிய யுக்தி தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பலரும் லாரியை நிறுத்தி பொம்மைகளை பார்த்து வாக்குறுதிகளை விளக்கம் கேட்டு வருகின்றனர்.

குமாரபாளையம் தொகுதியில் தங்கமணியின் இந்த பிரசார முறை அ.தி.மு.க.வின் பிற தொகுதிகளுக்கும் முன்மாதிரியாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த வித்தியாசமான பிரசாரம் தொகுதியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஜெயிக்கணும்னா எடப்பாடியார் ஆளணும்..!! அட்டகாசமாக வெளியான அதிமுக தேர்தல் பிரசார பாடல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share