×
 

“நீதிக்கான முக்கிய முன்னேற்றம்”..! சுர்ஜித் தாய் அதிரடி ARREST..!! திருமாவளவன் பாராட்டு..!!

கவின் ஆணவ படுகொலை வழக்கில் கைதாகி இருக்கும் சுர்ஜித்தின் தாய் கைது செய்யப்பட்டதற்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 27 வயது மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் என்பவர், கே.டி.சி. நகரில் பகல்நேரத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, அவர் ஒரு வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் கொண்டிருந்த காதல் உறவு. இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயார் மற்றும் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியின் சம்பந்தம் பற்றிய குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கவின் தனது தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தபோது, சுர்ஜித் என்பவர் அவரைத் தனியாக அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. சுர்ஜித் சம்பவத்துக்குப் பிறகு சரணடைந்தார். கவினின் குடும்பத்தினர் இதைச் சாதி அடிப்படையிலான படுகொலை என்று வலியுறுத்தினர். சுர்ஜித்தின் தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர். 

சுர்ஜித்தின் தாயாரான கிருஷ்ணகுமாரியும் உதவி ஆய்வாளர் தான். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆரம்பம் முதலே இருந்தன. சுர்ஜித்தின் தாயை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை போலீசார் கைது செய்தனர். கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரியை போலீசார் நேற்று கைது செய்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: அமைச்சர் ஆனதும் சர்ச்சையில் சிக்கிய வன்னி அரசு!? விதி மீறலால் துறையின் ரகசியத்தன்மை கேள்விக்குறி!

கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுர்ஜித் தாயார் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகுமாரி கைது தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கை எனவும் பாராட்டியுள்ளார். விசிகவின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின் கொலையாளி சுர்ஜித்தின் தாய் கைதாகி இருப்பதாகவும் அவர் கூறினார். 

இதையும் படிங்க: லீவா இருந்தாலும் அமைச்சர் ராஜ்மோகன் இத செஞ்சுட்டாரு..! விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share