விஜய் கூட கூட்டணி வைத்திருக்கக்கூடாதா? - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த திருமாவளவன்...!
ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி அரசியலமைப்புக்கு எதிரானது. கொள்கை அடிப்படையில் தான் நாம் திமுக கூட்டணியில் உள்ளோம்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு: 10, 15 தொகுதி வாங்க கூடாதா, எடப்பாடியிடம் செல்ல கூடாதா அல்லது கூட்டணியில் பங்கு என கூறிய விஜய்யிடம் செல்ல கூடாதா என பலர் கேட்கின்றனர்
பேரம் பேசும், அரசியல் வியாபாரம் நடத்தும் இயக்கம் அல்ல விசிக. பேராசையால் மாறி, மாறி நம்பிக்கையை இழக்க தயாராக இல்லை. திமுக அணியில் இருந்து வெளியேறினால் எனக்கு என்ன அச்சுறுத்தல், ஒன்றும் இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடியும். ஆனால் தமிழ்நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சங்பரிவார் அமைப்பினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.முகமூடி அணிந்து வருகிறார்கள்.
.
அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கிறார்கள்.பா ஜக இந்த மண்ணில் வேர் ஊன்ற கூடாது என்ற கொள்கை ரீதியான கட்சிகளுடன் மட்டுமே விசிக ஒத்துப்போக முடியும். மதச்சார்பினமை என்ற கோட்பாட்டில் உருவாக்கப்பட்டது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, இந்த கூட்டணியில் மட்டுமே நாம் அங்கம் வகிக்க முடியும். பாஜகவை தனித்து எதிர்க்கிற வலிமை நம்மிடம் இல்லை, அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்திட வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் நமக்கு கருத்து முரண்பாடுகள் உள்ளன.
ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி அரசியலமைப்புக்கு எதிரானது. கொள்கை அடிப்படையில் தான் நாம் திமுக கூட்டணியில் உள்ளோம். விஜய் அழைக்கிறார் என சென்றால், திமுக பலவீனமடைந்து, அதிமுக, பாஜகவிற்கு சாதகமாக மாறும். பெரம்பூரிலேயே விஜய் வெற்றி பெறுவாரா என அவருக்கே சந்தேகம் உள்ளதால், திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: வலிச்சாலும் பொறுத்துக்கோங்க!! வீண் வம்புக்கு போகாதீங்க!! கடுப்பேற்றும் கூட்டணி கட்சிகள்! திருமா கறார் கட்டளை!
விஜய்க்கு எவ்வளவு வாக்கு கிடைக்கும் என்பது நிரூபிக்கப்படாதது, பின்னர் எப்படி வெற்றி பெறுவார், ஆட்சியில் பங்கு கொடுப்பது, அது பெரிய மோசடி. எடப்பாடி 25 தொகுதி கொடுப்பதாக கூறியது குறித்து நாங்கள் கூட்டணி பேசவில்லை. திமுக கூட்டணி பலவீனமடைந்தால் என்ன எதிர் விளைவு ஏற்படும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்
அதிமுக, பாஜக வலுப்பெற்றால் அது பாஜகவிற்கு சாதகமாக செல்லும். பாண்டிச்சேரியில் அதிமுக 2 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது, அதிமுக தேய்ந்து, பாஜக வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலும் தேர்தலுக்கு பிறகு அதிமுக தேய்ந்து பாஜக வளரக்கூடும். பெரியார் அரசியலை வீழ்த்தினால் அம்பேத்கரை வீழ்த்தியதாக பொருள். நமது கட்சி தொண்டர்களுக்காக திமுக கூட்டணியின் அவசியம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளேன்
இதையும் படிங்க: நெருங்கியாச்சு எலெக்சன்..!! விசிக தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!!