வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

நெருங்கியாச்சு எலெக்சன்..!! விசிக தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தேர்தல் அறிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். பல்வேறு வாக்குறுதிகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, மகளிருக்கு 50 சதவீதம் விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையும், சிறை துறையும் சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் ஆணவக் கொலை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. 

கடலும், காடும், கனிமமும் நமதே, உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம், தனியார் துறையில் சமூக நீதி உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும், சிறுபான்மையினரை காக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றும் மது போதை பொருட்கள் ஒழிப்போம் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தலைவர் அடிச்சா அது ஆசீர்வாதம்..! திருமாவிடம் பளார் வாங்கிய இளைஞர் அந்தர் பல்டி..!!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது உள்நோக்கத்துடன் சிறப்பு நாடாளுமன்றம் கூட்டம் நடத்துவது மரபுக்கு எதிரானது என்று தெரிவித்தார். திமுகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பாஜகவுக்கு சாதகமாக விஜய் செயல்படுவதாக விமர்சித்துள்ளார். இந்த முறை தன்னால் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்தும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என விஜய் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட மறுத்தது! ஏமாளித்தனமா? அரசியல் தெளிவா? திருமாவளவன் விளக்கம்!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी