×
 

தமிழகம் எதிர்பார்த்த விஷயத்தில் திடீர் ட்விஸ்ட்... திமுக, அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்...!

வறட்சி காரணமாக தமிழகத்தில் போராடி வரும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும்

விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: நாடாளுமன்ற தொகுதி மறுவரை தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், தமிழக எம்.பி., ,க்களை அழைத்து, கலந்தாய்வு கூட்டம் நடத்த முன்வந்தது ஆறுதல் தருகிறது. நாளைய கூட்டத்தில் விசிக சார்பில் நானும், ரவிக்குமாறும் பங்கே ற்போம். கட்சிகளை தாண்டி அனைவரும் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.

இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் இணைந்ததால் தான், முந்தைய முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆகவே நாளை நடக்கும் கூட்டத்தில் தி.முக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி., க்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறமே். பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்

தமிழகத்தில் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு, பழனிசாமி நிவாரணம் கோரியுள்ளது நியாயமான கோரிக்கை தான். அதனை முதல்வர் பரீசிலீக்க வேண்டும். தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குரலையே, அரசியல் கட்சிகள் எதிரொலிக்கின்றனர்.

இதையும் படிங்க: இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

தமிழகத்தின் நிதிநெருக்கடியை நாம் அறிவோம், மத்திய அரசும் வஞ்சகம் செய்துள்ளது என்றாலும், எந்த திட்டத்தையும் நிறுத்தாமல் நடைமுறைப் படுத்த முயற்சிப்பது பாராட்டுக்குறியது. வருங்காலங்களில் புதிய திட்டங்களை கொண்டு வருவார்கள். திட்டங்களின் பெயர் மாற்றம் வாடிக்கையானது தான். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இதையும் படிங்க: டபுள் மீனிங் பேச்சு..! இதெல்லாம் வேணாம் உதய்..!! திருமாவளவன் அறிவுரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share