×
 

கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

காங்கிரஸ் கட்சியோடு நீண்ட நாட்களாக உறவு வைத்துக் கொண்டு தொகுதி பங்கீடு சமயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்.

தர்மபுரியில் திருமண விழா ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், விஜய் அரசியலா கட்சி தொடங்காமல் காலத்திலே நான் திமுக கூட்டணி விடாது வரமாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். திமுக கூட்டணியை கட்டி காப்பதில் உறுதியாக இருந்தேன். பலர் ஆசைவார்த்தை காட்டி, தூதூ அனுப்பினார்கள். இதை வெளியில் சொல்ல முடியாது. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறவில்லை. கூட்டணியிலேயே கட்சிகளை தக்க வைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம்.

காங்கிரஸ் கட்சியோடு நீண்ட நாட்களாக உறவு வைத்துக் கொண்டு தொகுதி பங்கீடு சமயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள். புதியதாக ஒரு கட்சியை கொண்டு வந்து, கூடுதலாக சீட் கொடுத்தால், மற்றவர்கள் சந்தோஷப்படுவார்களா? நாம் தோற்றாலும் ஒன்றாக இருப்போம் என்றே சொல்லவில்லை. அதை கூட்டணி தலைமை செய்யவில்லை. திமுகவோடு காங்கிரஸ் உறவு நல்லிணக்கமாக இல்லை. பதவி ஆசை இருந்திருந்தால், காங்கிரஸ் போனதுமே நாமே போயிருப்பேன். விஜயே கூப்பிட்டார். நீங்களே வாருங்கள். அமைச்சராகுங்கள் என்று சொன்னார். நான் மறுதலித்தேன்.

கம்யூனிஸ்ட்கள் அறிவித்த போதே சொல்லியிருப்பேன். வெளியில் இருந்துதான் ஆதரவு என்று சொன்னேன். ஆனால் 19 நாட்களுக்கு பிறகு ஏன் நடந்தது. நீங்கள் கொள்கை பிடிப்போடு இருப்பீர்கள் என்பதற்காக, ஒரு எளியவன் அமைச்சராவதை தடுக்க கூடாது என்று என் உள்மனம் சொன்னது. அதனால் அந்த முடிவை எடுத்தேன். என்னோடு 30 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த தம்பிக்கு கொடுத்தேன். நான் எம்எல்ஏவாக இருந்திருந்தால், அமைச்சராக இல்லை, வெறு வாய்ப்பியிருந்திருக்கும் அது வேறு. அதன் பிறகு வன்னியரசை அழைத்து, உனக்கு ஆசை இருக்கா என்று கேட்டேன். உங்கள் விருப்பம் என்று சொன்னார்.  அதன் பிறகுகே திருமாவளவனை நம்பிய தம்பி 10 நாளாவது அமைச்சராக இருக்கட்டும் என முடிவெடுத்தேன். 

இதையும் படிங்க: விடிந்ததுமே திருமாவுக்கு சி.எம். விஜய், மு.க.ஸ்டாலின் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்... செம்ம ஹேப்பியான சிறுத்தைகள்...!

நான் உங்கள் கூட்டணியை விடாது வெளியேறவில்லை. முடிவெடுக்கும் வரை வீட்டில் இல்லை. அதன் பிறகு தான் விசிக கூடாரம் காலி என்று சொன்னார்கள். விசிகவினர் விஜய் பின்னாடி சென்றுவிட்டார்கள் என்று பரப்பினார்கள்.  அட அர்ப்பர்களே விடியறாகாலை மொரப்பூர் ரயிலாக நிலையம் வந்து பகிருங்கள். உள்ளுந்தூர் பேட்டை கூட்டத்தை நடத்தவே முடியவில்லை‌. வந்தது 25 சதவீதம் தான்‌. வெளியே இருந்த கூட்டம் வந்திருந்தால், பலபேர் தூக்குபோட்டு செத்திருப்பார்கள்.

ஜென்சி, ஜென்சி என்று சொல்கிறீர்கள். இன்று விசிக ஜென்சி கூட்டமாக இருக்கிறது. எங்களுக்கு எந்த பின்புலமும் இல்லை‌. தூக்கிப் பிடிக்க மீடியா இல்லை. எங்களை திமுக தான் கைவிட்டது‌. பலியிடும் போது வெளியே வந்ததாலா தான் ஆடு பாதுகாப்பாக இருக்கும். கதவை முழுவதும் திறந்து வைத்துவிட்டால், ஆடுகள் வெளியே தானே போகும். பிடித்து வைக்கும் திறன் இல்லை என்று ஏன் புரிந்துக் கொள்ளவில்லை‌. விசிக, காங்கிரஸ், இடது சாரிகள் வெளியேறியது திமுக தான் காரணம். தவெகவை கடடிக்க முடியாதது திமுக அனுகுமுறை தான் காரணம். கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போடச் சொன்னேன். காலதாமமாக வந்தது. கூட்டம் நெரிசல் கிண்ணம் காட்டி பலரை சேர்த்திருக்கலாம்.  நீங்கள் பேசவில்லை. அதனால் நான் பேசினேன். ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று. அன்று அவர் மீது நம்பிக்கை இல்லை‌. இன்று அந்த நம்பிக்கை இல்லை. ஏனென்றால், நீங்கள் அதிமுக, பாஜக, பாமகவோடு ஆதரவு கேட்கவில்லை. எங்களிடம் கேட்டார்.

இதையும் படிங்க: தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share