×
 

“உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா - பதவி நீக்கம் செல்லாது என்பது குறித்த எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு திருப்பூர் மாவட்ட அதிமுக விளக்கம்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 
இது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி ,  சி.வி சண்முகம் தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து பிரிந்து தமிழக வெற்றி கழகத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இது கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் சிவி. சண்முகம் அணிக்கு தாவியுள்ளதால் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,சி.வி.சண்முகம்,உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு நிர்வாகிகளை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் புதிய நிர்வாகிகளை நியமித்தார்.திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக திருப்பூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசாமியை நியமித்தார்.அதனை தொடர்ந்து அவரது அறிமுக கூட்டம் மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் பனப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதியதாக நியமிக்கப்பட்ட புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி திருப்பூர் மாவட்ட செயலாளராக நியமித்தமைக்கு முதலில் எடப்பாடியாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, கழகத்தினுடைய பொதுச்செயலாளர்  எடப்பாடி தலைமையில் கழகம் கட்டுக்கோப்பாக இருக்கிறது. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு இந்தக் கூட்டம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

இதையும் படிங்க: அதிமுக Ex. அமைச்சர்கள் உருவப்படங்களுக்கு சாணி கரைசல்... நெல்லையில் EPS அணியினர் ஆர்ப்பாட்டம்..!

திருப்பூர் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் இருக்கக்கூடிய அனைத்துக் கழக நிர்வாகிகளும் எடப்பாடியாரின் தலைமையேற்று ஒருங்கிணைந்து இந்த நிகழ்விலே கலந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த இயக்கம் எந்தெந்தக் கட்டத்தில் சோதனைகள் வருகின்றதோ, சோதனைகள் வருகின்ற காலத்திலெல்லாம் இந்தக் கழகம் வீருகொண்டு எழுந்து அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதை நிரூபிக்கின்ற ஒரு சூழ்நிலை இன்றைக்கு உருவாகி கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில், ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலைக்காகக் கழகத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, மீண்டும் கழகத்தை வலுவோடு வழிநடத்துவதற்காக நிர்வாகிகளை ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக, ஊராட்சி வாரியாகச் சந்தித்து, கழகத்தை வலுப்படுத்தி, மீண்டும் தமிழகத்திலே அதிமுகவினுடைய ஆட்சியை கொண்டு வருவதற்கு எடப்பாடி அவர்களுடைய கரத்தை வலுப்படுத்துவதற்கு அயராது பாடுபடுவோம் என்று இந்த நேரத்தில் உறுதி ஏற்கிறோம் என கூறினார்.

வேலுமணி தலைமையில் இந்த இயக்கத்துல வேலை செஞ்சீங்க. இப்பொழுது அவர் வேறு அணிக்கு சென்று விட்டார் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு நாங்கள் அனைவரும் பொதுச்செயலாளர் எடப்பாடியினுடைய தலைமையில்தான் இந்த இயக்கம் இருக்கு. இந்தக் கட்சிக்குத் தனிப்பட்ட முறையில வேலுமணி பொதுச்செயலாளர் கிடையாது.நேற்று வரைக்கும் அவர் ஒரு மாவட்டச் செயலாளர், தலைமைச் செயலாளர். இன்னைக்கு அவரு கட்சியில சாதாரண உறுப்பினர் அவ்வளவுதான் என கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த பதவிகள் மற்றும் நீக்கம் செல்லாது என்ற வேலுமணியின் அறிக்கை குறித்து கேட்ட போது, இதற்கு முன்பு எஸ்.பி.வேலுமணி கட்சியில் இருந்து சிலரை நீக்கினார்.அவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர் ஒத்து கொள்வாரா? வேலுமணி பதவியில் இருக்கும் போது அவர் கட்சியை விட்டு நீக்கினால் செல்லும்,அவரை நீக்கினால் செல்லாதா என கேள்வி எழுப்பினர்.இவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டால் செல்லும்,பதவி நீக்கம் செய்தால் செல்லாதா.இவரை தலைமைச் செயலாளரா போட்டது யாரு? எடப்பாடி,அது செல்லும். ஆனா இவங்கள எடுத்தா சொல்லாதா? பொதுக்குழுவில் மீண்டும் முடிவெடுக்கப்பட்டு அவர்கள் இணைக்கப்பட வாய்ப்புள்ளதா என கேட்ட போது பொதுக்குழுவை பொதுச்செயலாளர் தான் கூட்ட முடியும்.

வேலுமணி இப்போது ஓர் அடிப்படை உறுப்பினர் அவர் பொதுக்குழுவை கூட்ட சொல்லவும் நடத்த சொல்லவும் முடியாது. சசிகலாவை அணிக்குள் சேர்ப்பது குறித்து வேலுமணி,சி.வி.சண்முகம் கூறியது குறித்து கேட்ட போது ஓ.பன்னீர் செல்வத்தை பொதுக்குழுவில் இருந்து வெளியேற்றிய போது சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி ஒன்றும் சொல்லவில்லை,இவர்களுக்கு வேண்டாம் என்றால் அனைவரையும் நீக்க சொல்வார்கள்,வேண்டும் என்றால் அனைவரையும் ஒன்று சேர்க்க சொல்வார்கள்.

சசிகலா சிறைச்சாலையில் இருந்த போது அவர்களை தூக்கி எறிந்தது இவர்கள் இருவரும் தான்.தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என கூறினார்.செங்கோட்டையின் முன்னிலையில் அதிமுகவினர் தவெக வில் இணைவது குறித்து கேட்ட போது புதியதாக கடை ஆரம்பித்தால் சில வியாபாரிகள் போவார்கள்,அவர்கள் கட்சி உணர்வுகள் உள்ளவர்கள் அல்ல,அடிக்கடி கட்சி மாறுபவர்கள் என கூறினார்.இக்கூட்டத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட,ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share