×
 

விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை..! குவாரிகளுக்கு அமைச்சர் டி.கே. பிரபு வார்னிங்..!

விதிகளை மீறும் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கனிமவளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. பிரபு, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் கல்குவாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு அனுமதி பெற்ற அளவுக்கு மட்டுமே கற்கள் வெட்டப்படுகின்றனவா என்பதை சரிபார்க்கவும், சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும் மாவட்ட அளவில் உடனடி ஆய்வு நடத்த உத்தரவு வழங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்குவாரிகளில் பல இடங்களில் அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும், மத்திய அரசின் சிபா கமிட்டி விதிமுறைகள் மீறப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும், கல்குவாரிகளை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள குழுக்கள் தங்கள் கடமையைச் சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அரசு உத்தரவு இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகளும் பல இடங்களில் உள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்தப் புகார்களைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட அமைச்சர் பிரபு, ஒவ்வொரு மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகளுக்கும் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: கனிம வளங்கள் மூலம் புதிய தொழில் முதலீடுகள்... முதல்வரை சந்தித்த பின் அமைச்சர் டி.கே. பிரபு உறுதி..!

ஒவ்வொரு கல்குவாரியிலும் அரசு அனுமதித்த அளவுக்கு எவ்வளவு கல் வெட்டப்பட்டுள்ளது, அதிகப்படியாக எடுக்கப்பட்டுள்ளதா, சட்டவிரோத கல்குவாரிகள் எத்தனை உள்ளன என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உடனடியாக திரட்டி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார். 

இதையும் படிங்க: தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளே இப்படியா?... தவெக அமைச்சர் செயலால் ஷாக்கில் மக்கள்... அம்பலமான ‘ஸ்டிக்கர்’ அரசியல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share