×
 

ஓயாத அதிருப்தி!! விடாமல் அடிக்கும் மாணிக்கம் தாகூர்!! திமுக கூட்டணி வேணுமா? வேணாமா? காங் முக்கிய முடிவு!

திமுக– காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி மேலோங்கி நிற்கிறது.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் முன்பு இல்லாத அளவு விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கோரி பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் “ஆட்சியில் பங்கு தர முடியாது” என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இதை விமர்சித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பகிரங்கமாக பேசியுள்ளார். முதல்வருடன் நேரடியாக மல்லுக்கட்டும் அவரது கருத்துக்கு திமுக மூத்த அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். 

ஒரு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தன் தந்தையுடன் மூத்த அமைச்சரை சந்திக்க சென்றபோது, அமைச்சர் முகம் கொடுத்து பேசவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் வெறுப்பு உணர்வு மேலோங்கியுள்ளது.

இதையும் படிங்க: பிப்., 22 என்ன நடக்கும்?! திமுக அட்ராசிட்டியால் காங்., அப்செட்?! விஜய் உடன் பேச்சு நடத்த ராகுல்காந்தி ப்ளான்?!

மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் “காங்கிரஸ் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்; கூட்டணியை நம்பி அரசியல் நடத்த முடியாது” என்று காட்டமாக பேசினார். இதற்கு சமூக வலைதளங்களில் காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

திமுக மேலிடம் கூட்டணி கட்சிகளுக்கு “கூட்டணி ஆட்சி தேவையில்லை” என்று அறிவிக்கும்படி அறிவுறுத்தியது. அதை ஏற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ “தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும் போது ஆட்சி பங்கு கோரிக்கை எடுபடாது” என்று அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், ஆட்சி பங்கு அவசியமில்லை என்று பேட்டி அளித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை “ஸ்டாலின் - ராகுல் இடையேயான பாச உறவை யாரும் சிதைக்க முடியாது” என்று திமுகவின் குரலாக ஒலித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் கூட்டணி குறித்து இரு வேறு கருத்துகள் நிலவுவதால், மேலிடம் முடிவு கட்ட முன்வந்துள்ளது.

வரும் 18ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஆலோசனை நடத்த உள்ளார். ஒவ்வொரு மாவட்டத் தலைவரிடமும் கருத்து கேட்கப்பட்டு, பெரும்பான்மை அடிப்படையில் திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என முடிவு எடுக்கப்படும்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையுமா அல்லது தொடருமா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. 2026 தேர்தல் களத்தில் இந்த பிரச்சினை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளும் இப்போது ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருவது தமிழக அரசியலில் புதிய சூழலை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்களே முடிவு செய்வார்கள்! ஸ்டாலினுக்கு காங்., எம்.பி பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share