×
 

எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

அவையில் சில உறுப்பினர்கள் பேசிய வார்த்தைகள் அல்லது கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், அந்தப் பேச்சுகளை நேரலை ஒளிபரப்பில் இருந்து நீக்கக்கூடாது என்று மக்கள் தன்னிடம் கேட்பதாக அவர் தெரிவித்தார்.

சென்னை: சட்டசபையில் தாங்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுகின்றனர் என்பதை மக்கள் நேரடியாக தெரிந்து கொள்ள விரும்புவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவதில் தான் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில மாநாட்டில் சபாநாயகர் பிரபாகர் பங்கேற்று பேசினார். அப்போது, செவிலியர் பணியில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சட்டசபை நடவடிக்கைகள் தற்போது நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், இதன் மூலம் மக்கள் தங்களது பிரதிநிதிகளின் செயல்பாடுகளை கவனிக்கத் தொடங்கியுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார். குறிப்பாக, அவையில் சில உறுப்பினர்கள் பேசிய வார்த்தைகள் அல்லது கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், அந்தப் பேச்சுகளை நேரலை ஒளிபரப்பில் இருந்து நீக்கக்கூடாது என்று மக்கள் தன்னிடம் கேட்பதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டசபையில் தவெக உறுப்பினர்களை விட திமுக, அதிமுகவுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தேன்! சபாநாயகர் பேச்சால் கலகல!

தாங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எவ்வாறு பேசுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வது மக்களின் விருப்பமாக இருப்பதாகவும் பிரபாகர் கூறினார். மேலும், அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் எவை என்பது தெரிந்திருந்தும் அவற்றை ஏன் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கு பதிலாக தகுதியான மற்றும் பொருத்தமான கருத்துகளை ஏன் முன்வைக்கக்கூடாது என்றும் மக்கள் கேள்வி எழுப்புவதாக அவர் தெரிவித்தார்.

சட்டசபையில் பேசப்படும் கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் நடைமுறைக்கும், நேரடி ஒளிபரப்புக்கும் இடையே வேறுபாடு இருப்பது தொடர்பாக சமீபத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் சட்டசபை நடவடிக்கைகளை ஒளிபரப்புவதற்கான தொழில்நுட்ப முறையை பரிசீலித்து வருவதாகவும் சபாநாயகர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதில் தான் அக்கறையுடன் இருப்பதாகவும், மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு தொடர வேண்டும் என்றும் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டபுள் மீனிங், டிரிபிள் மீனிங் பேச்சு? பெண்களை அவதூறாக பேசினால்.. சட்டசபையில் முதல்வர் விஜய் வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share