×
 

டபுள் மீனிங், டிரிபிள் மீனிங் பேச்சு? பெண்களை அவதூறாக பேசினால்.. சட்டசபையில் முதல்வர் விஜய் வார்னிங்!

அந்த சம்பவத்தை முதல்வர் விஜய் தனது உரையில் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்துகள் அந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை: பெண்களைப் பற்றி அவதூறாகவும், இரட்டை அல்லது மூன்று அர்த்தம் கொண்ட வகையிலும் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் முதல்வர் விஜய் சட்டசபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை அளித்தார். அப்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், பொது வெளியில் பேசப்படும் கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக பெண்கள் குறித்து பேசப்படும் விதம் தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்திய விஜய், சமீப காலமாக தமிழகத்தில் ஆபாசமும் வன்மமும் கலந்த அரசியல் பேச்சுகள் அதிகரித்து வருவதாக விமர்சித்தார். பெண்களைப் பற்றி இரட்டை அர்த்தத்திலும், மூன்று அர்த்தத்திலும் பேசுவதை பொதுமக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் நெற்றியில் திடீர் மாற்றம்! கருப்புக்கு பதில் சிகப்பு பொட்டு?! எதிரிகளை வெல்லும் கஜகேசரி திலகம்!

மேலும், பெண்களைப் பற்றி இனிமேல் அவதூறாகவோ, அசிங்கமாகவோ பேசினால் சட்டம் தனது கடமையை செய்யும் என்று விஜய் எச்சரித்தார். இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு முன்பு, தங்களது வீட்டில் உள்ள பெண்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்தப் பேச்சு, சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் பெண்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய பேச்சு எழுந்த சம்பவத்தை அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பேச வைத்துள்ளது. அந்த சம்பவத்தை முதல்வர் விஜய் தனது உரையில் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்துகள் அந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் பரபரப்பு, புகார், கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த பின்னணியில்தான் முதல்வரின் தற்போதைய சட்டசபை பேச்சு கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விஜய்யின் எச்சரிக்கை, அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், பொதுவெளியில் அரசியல் விமர்சனம் செய்யும்போது தனிநபர் மற்றும் பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பது தொடர்பான விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மழையில் நனையும் நெல்மணிகள்.. உடனே கொள்முதல் செய்க! பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share