NDA கூட்டணியில் தவெக?... இன்று மாலை டெல்லி பறக்கும் விஜய்... பாஜக தலைவர்களுடன் சந்திப்பு?
விஜய் இன்று மாலை 3 மணிக்கே டெல்லி செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மறுபடியும் நேரயில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த வருஷம் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டம் நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த விவகாரத்தில் முதலில் தமிழ்நாடு அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசார்ணை நடத்தி வந்தது.
இது பத்தி விசாரிக்க முதல்ல தமிழக அரசு மூலமா தனிநபர் ஆணயம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கு எதிராக தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு கண்காணிப்பில் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக முதலில் தாவேக்காவுட நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டவர்களிடம் டெல்லியில வைத்து சிபிஐ விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கி 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மீண்டும் கடந்த 10ம் தேதி விஜய் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அன்றைய தினம் வேட்பாளர்களுடன் நேர்காணல் இருந்ததால் விஜய் செல்லவில்லை.
இதையும் படிங்க: பேசி பேசியே சிலிர்க்க வைச்சாரே... 60 பேரை அம்போன்னு நட்டாற்றில் விட்ட விஜய்... அதிமுக கொடுத்த ஆஃபர்...!
இதனையடுத்து நாளை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதற்காக விஜய் இன்று மாலை 3 மணிக்கே டெல்லி செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை கவர்வதற்காக விஜயை எப்படியாவது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயன்று வருகிறது. எங்களுடன் கூட்டணி வைத்தால் 45 சீட் + இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி தருவதாக பாஜக தரப்பில் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் விஜயை கூட்டணிக்குள் கொண்டு வரவே சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கு சிக்கல் போன்ற விஷயங்களை மத்திய அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய என்.ஆனந்த் தவெக தனித்து போட்டியிடலாமா? கூட்டணி வைக்கலாமா? என்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று மாலை 3 மணிக்கு டெல்லி செல்லும் விஜய், அங்குள்ள பாஜக முக்கிய தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பேச்சுவார்த்தையில் டீலிங் ஓ.கே.ஆனால் தமிழக வெற்றிக் கழகம் பாஜக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்ததாக இன்றே அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “விஜய் கூட இருக்குறது எல்லாமே பீடைங்க... சனியன் சகடை , பான் பராக் ரவி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட பி.டி. செல்வகுமார்...!