×
 

பேசி பேசியே சிலிர்க்க வைச்சாரே... 60 பேரை அம்போன்னு நட்டாற்றில் விட்ட விஜய்... அதிமுக கொடுத்த ஆஃபர்...!

முதலில் நேர்காணல் நடத்தப்பட்டு, தற்போது தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள 60 நபர்களுக்கும் கல்தா கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 தமிழகத்தின் தேர்தல் களம் அனலடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தவெக தலைவர் விஜய் எந்த பக்கம் சாயப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இந்த சூழலில் பாஜக தரப்பிலிருந்து விஜய்க்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி அழைப்பு மற்றும் கூட்டணிக்கு தகவல்கள் கசிந்திருப்பது தமிழக அரசியல் கட்டாரங்களில் புதிய புயலை கிளைப்பிருக்கிறது .

இன்று மதியம் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில மாவட்ட செயலாளருடன் அவசர ஆலோசனை நடைபெற்றிருக்கிறது. அந்த ஆலோசனையில தவெக தலைவர் விஜய் எந்தெந்த வேட்பாளர்களை அறிவிக்கிறாரோ அந்தந்த தொகுதிகளில் மாவட்ட செயலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனைக்கான மீட்டிங் தான் என்று கூறப்பட்ட சூழ்நிலையில், தவெக  தனித்து போட்டியிடலாமா?, கூட்டணி அமைக்கலாமா? என்ற கருத்தும் கேட்கப்பட்டிருக்கிறது.

 
அதில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது மறைமுகமாகவே கூட்டணி என்றுதான் மாவட்ட செயலாளர்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் பாஜகவுடனான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு தான் அவர்கள் சம்மதம் கேட்கிறார்கள் என்ற நோக்கில பல சிறுபான்மையினர் மாவட்ட செயலாளர்கள் மட்டும் தயக்கம் காட்டி இருக்கிறார்கள். எனினும் கூட பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்ததாகவே கூறப்படுகிறது. ஆன்லைன் மூலமாக கருத்து கேட்ட தகவலை தற்பொழுது தவெக தலைவர் விஜயை சந்தித்து நேரில ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற விஷயங்களை புஸ்ஸி ஆனந்த் பகிர்ந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

திமுக அரசை எதிர்க்க வலுவான கூட்டணி வேண்டும் என்றால் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைய வேண்டும் என பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். அதே நேரத்தில் விஜய் தனித்து போட்டியிட்டால் அது மறைமுகமாக திமுகவிற்கு சாதகமாக அமையலாம் என்றும் சில அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. மாறாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் சேர்ந்தால் உரிய தொகுதிகளும் அரசியல் மரியாதையும் வழங்கப்படும் என்று அதிமுக தலைமை ஆஃபர் கொடுத்துள்ளது. 

இதையும் படிங்க: “விஜய் கூட இருக்குறது எல்லாமே பீடைங்க... சனியன் சகடை , பான் பராக் ரவி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட பி.டி. செல்வகுமார்...!

இதில் மற்றொரு சிக்கலாக தவெக சார்பில் போட்டியிட 60 வேட்பாளர்களை விஜய் டிக் அடித்து வைத்திருந்தார். அதிமுகவிடம் முதற்கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே விஜய் 60 இடங்களை கேட்டிருக்கிறார். அதற்காகவே அவசர, அவசரமாக நேர்காணல் நடத்தி ஏற்கனவே உத்தேச பட்டியலில் இருந்த 60 பேரை வேட்பாளர்களாக தேர்வும் செய்து வைத்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ என்.டி.ஏ.கூட்டணிக்குள் ஏற்கனவே கூட்டணி கட்சிகள் உறுதி செய்யப்பட்டு விட்டதால், தவெகவிற்கு 45 சீட்கள் மட்டுமே தர முடியும் என கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதலில் நேர்காணல் நடத்தப்பட்டு, தற்போது தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள 60 நபர்களுக்கும் கல்தா கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

இதையும் படிங்க: ஓவர் கான்பிடெண்ட்... கரூர் தொகுதியில் மதியழகனை களமிறக்கும் தவெக... தெருத் தெருவாக மக்கள் காலில் விழுந்து பிரசாரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share