×
 

தொகுதி பங்கீடு தீவிரம்..! சீக்கிரம் வந்து சேருங்க..! டெல்லிக்கு பறந்த TTV தினகரன், அன்புமணி..!

டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.

அதிமுக தொகுதி பங்கீடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தையை முறையாக நடக்கவில்லை. பாஜக கேட்கும் தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக கூடுதல் தொகுதிகள் கேட்பதால் இந்த இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து சமூக முடிவை ஏற்றுவதற்காக சென்றதாக சொல்லப்பட்டது. இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களை சந்திக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி புறப்பட்டார். பாமக தலைவர் அன்புமணியும் இன்று டெல்லி செல்கிறார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசி டிடிவி தினகரன், டெல்லி எவ்வளவு நிதி கொடுத்தாலும் திமுக அரசு அதனை கபளிகரம் செய்கிறது என்ற குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: பதவி சுகம்… இந்த வயசுல இது தேவையா? ஓபிஎஸ்ஐ ரவுண்டு கட்டிய TTV தினகரன்..!!

தேசிய ஜனநாயக கூட்டணி என்பதை பாஜக தலைமையிலான கூட்டணி தான் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை அழைப்பு விடுத்ததால் தான் டெல்லி செல்கிறோம் என்று கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து நான்கு நாட்களில் சுமூக முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்: தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை..!! அமித்ஷாவை சந்திக்க டெல்லி பறந்த அன்புமணி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share