×
 

பதவி சுகம்… இந்த வயசுல இது தேவையா? ஓபிஎஸ்ஐ ரவுண்டு கட்டிய TTV தினகரன்..!!

நரி வேடம் போட்டவர் ஓ. பன்னீர்செல்வம் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதாகவும் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, வரும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.

2021-ஆம் ஆண்டு, ஸ்டாலின் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திமுக-வினுடைய விடியா ஆட்சியில் தமிழ் நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது என்றும் தமிழ் நாட்டின் தெருக்களில் கஞ்சா புழக்கம் இல்லாத இடமே இல்லை என்கிற நிலையை இந்த விடியா அரசு உருவாக்கி இருக்கிறது என்று கூறினார்.

அதன்படி, திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதையும் படிங்க: “ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!

எடப்பாடி பழனிச்சாமியை நன்றி மறந்தவர் என தொடர்ந்து ஓபிஎஸ் விமர்சித்து வரும் சூழ்நிலையில் நரி வேடம் போட்டவர் ஓ. பன்னீர்செல்வம் என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். டாடா பிர்லா போல் பொருளாதாரத்தை ஈட்டி விட்டு திமுகவில் ஓபிஎஸ் அடைக்கலம் புகுந்ததாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு திமுகவுக்கு ஓபிஎஸ் சென்று இருப்பதாக விமர்சனம் செய்தார். ஓ. பன்னீர்செல்வத்துக்கு இந்த வயதில் இது தேவையா இன்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கருத்துவேறுபாடுகளில் பிரிந்திருந்தோம் 2021 ல் ல் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது.

வயது முதிர்ந்த மூதாட்டிகள் கூட பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். போலீசாரே கஞ்சா விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம் பெண்கள் வாக்கு திமுக விற்கு கிடைக்கும் என்று முதல்வரும், துணை முதல்வரும் பேசி வருகிறார்கள் ஆனால் பாலியல் பிரச்னையால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றிலும் ஊழல் அதிகரித்துள்ளது என்றார். ரவுடிகள் கூலிப்படைகள் ஜெயலலிதா ஆட்சியில் அடக்கிவைக்கப்பட்டனர். அம்மாவின் ஆட்சி தான் வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக பேசியவர். பா.ஜ.க ஆளும் ஆட்சியில் சிறுபான்மையினர் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று கூறினார். 

இதையும் படிங்க: உலகத்துலயே நன்றிகெட்ட அரசியல்வாதி EPS தான்.. மீண்டும் சீண்டிய OPS ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share