டெல்லியில் இருந்து வந்த உத்தரவு!! விஜயை டீலில் விட்ட டிடிவி!! திடீர் யூ டர்ன்னுக்கு இதுதான் காரணம்!
டெல்லியிலிருந்து வந்த முக்கிய போன் கால் மற்றும் அதனை ஒட்டி நடந்த அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து தற்போது, என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார் டிடிவி தினகரன்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடி முடிவு எடுத்துள்ளார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பேசப்பட்ட நிலையில், தற்போது அதிமுக - பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தினகரன் ஏற்கனவே "அமமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக ஆவார்கள்" என்று உறுதியளித்திருந்தார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு (பவர் ஷேரிங்) வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவோ அதிமுகவோ ஏற்கவில்லை. த.வெ.க. மட்டுமே இத்தகைய வாக்குறுதி கொடுத்ததால், டிடிவி விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
"தேர்தல் நேரத்தில் எதிரி யார், துரோகி யார் என்று தெரியாது. தமிழ்நாட்டின் நலனுக்காக யாருடன் கூட்டணி சரியோ அவர்களுடன் இணைவோம். கவுரவமான இடங்கள், ஆட்சி பங்கு கொடுப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி" என்று அவர் பலமுறை வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: கூட்டணியில் இணைந்த டிடிவி!! நேரில் சந்திக்க முரண்டு பிடிக்கும் எடப்பாடி! பரபரக்கும் அரசியல் பின்னணி!
ஆனால் திடீரென டெல்லியிலிருந்து என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய போன் கால்கள் வந்ததாக தகவல்கள் கசிந்தன. அதே நேரத்தில் டிடிவி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மீண்டும் தீவிரமடைந்தன. முதலாவதாக, இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் பதிவு செய்த வழக்கு. இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது. டிடிவி பலமுறை ED அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
இரண்டாவதாக, அந்நியச் செலாவணி மோசடி வழக்கு. 1996-இல் பிரிட்டன் நிறுவனத்திடமிருந்து சட்டவிரோதமாக அந்நிய செலாவணி பெற்று வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக டெபாசிட் செய்ததாக ED வழக்கு. இதில் ரூ.28-31 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.
ஆனால் இதுவரை செலுத்தாததால், டிடிவியை திவாலானவர் என அறிவிக்க கோரி ED சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. 2024-2025-இல் அபராத வசூல் தாமதத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட இருந்த நிலையில், டிடிவி என்டிஏவில் இணைந்துள்ளார்.
இதனால், டெல்லி மத்திய அரசின் அழுத்தம் அல்லது வழக்குகளை கட்டுப்படுத்தும் உத்தியால் இந்த மாற்றம் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. டிடிவி சமீபத்தில் பியூஷ் கோயலை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமியை "துரோகி" என்று கடுமையாக விமர்சித்த அவர், தற்போது அதே தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. என்டிஏ தரப்பில் அமமுகவுக்கு கவுரவமான இடங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் தமிழகத்தில் முக்குலத்தோர் வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் பாஜக இந்த இணைப்பை விரும்பியது. ஆனால் டிடிவி - எடப்பாடி இடையேயான சந்திப்பு இன்னும் நடக்கவில்லை. இது கூட்டணி உறுதியில் சிக்கலை ஏற்படுத்தலாம். தமிழக அரசியல் இப்போது மேலும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது!
இதையும் படிங்க: எடப்பாடி தலைமையை ஏற்க மாட்டோம்!! அதிமுக - பாஜக கூட்டணி கனவுக்கு வேட்டு வைக்கும் அமமுக!!