சசிகலாவுக்கே சவாலா?... சின்னம்மாவை ‘சீப்போடு’ ஒப்பிட்ட டிடிவி தினகரன்... அதிமுகவுடன் இணைந்த ஜோரில் நக்கல்...!
சீப்பை ஒளித்து வைப்பதால் திருமணம் நிற்காது என ஒதுங்கி இருப்பவர்கள் உணருவார்கள் என்றும் விலகி இருப்பவர்கள் நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வருவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பெயரை குறிப்பிடாமல் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, மதுரையில் ஜெயலலிதா சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், NDA கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% ஓர் அணியில் திரண்டு உள்ளோம். தீய சக்தி திமுக மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு உள்ளார்கள்.
யாரோ ஒரு சில பேர் ஒதுங்கி இருப்பவர்கள் விலகி இருப்பவர்கள் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. ஒரு சிலர் சீப் ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று நினைக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைவார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்.
இதையும் படிங்க: WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!
எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள் பேசினார்கள். அமமுக மற்றும் அதிமுக கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. 35 லிருந்து 40 தொகுதிகள் வரை திமுக விட காங்கிரஸ் கேட்கிறார்கள். தனி ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள் அது உண்மை. காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடருமா என்பது தெரியவில்லை.
தேசிய முஸ்லிம் லீக் காதர் மைதீன் ஏற்கனவே மூன்று தொகுதியில் போட்டியிடும் தற்போது இரண்டு தொகுதி தருவேன் என்று திமுக சொல்கிறார்கள் பேசியுள்ளார். இதுபோன்ற நிலைமை எங்கள் கூட்டணியில் இல்லை. அமமுக , அதிமுக கட்சியில் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் கருத்து வேறுபாடுகளை கடந்து ஓர் அணியில் சேர்ந்துள்ளோம்.
எங்கள் கட்சிக்கான தொகுதி பங்கீடு உடன்பாட்டை பாஜக மற்றும் அதிமுகவோடு பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எந்த ஒரு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு.
எந்த ஒரு சின்ன மன வருத்தமும் யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு. அமமுகவுக்கு தகுதியான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக கட்சி மூலம் செய்வோம். பாஜக வலியுறுத்தல் படி அமமுக செயல்பட்டு அதிமுக கூட்டணியில் நாங்கள் இடங்களை பெற்று வெற்றிகரமாக அமமுக வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் அரசியல் களம்..!! சசிகலா 'அம்மா அதிமுக' கட்சி அறிவிப்பு..!! 2026 தேர்தலில் எடப்பாடிக்கு பெரும் சவால்..!!