×
 

நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

டிடிவி தினகரன் சார்பில் சென்னை கிண்டி போலீசில் தவெக தலைவர் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மெஜாரிட்டி இல்லை. மெஜாரிட்டிக்கு மொத்தம் 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் விஜய் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் என 4 பேர் தவெகவிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

விசிக இன்னம் ஆதரவு தராத நிலையில்,  இன்னும் ஒருவரின் ஆதரவு வேண்டும்.இந்நிலையில் தான் நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் சந்தித்து தனக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி, ஆட்சியமைக்க மீண்டும் உரிமை கோரினார். அதில் மன்னார்குடி தொகுதியில் அமைச்சர் டிஆர்பி ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்ற அமமுகவின் காமராஜ் பெயர் இருந்தது.

தவெக ஆட்சி அமைக்க அமமுக எம்.எல்.ஏ ஆதரவு கடிதம் கொடுத்தது போன்ற போலியான கடிதத்தை தவெக கொடுத்திருப்பதாக டிடிவி தினகரன், நேற்றிரவு ஆளுநரிடம் நேரில் சந்தித்து புகார் அளித்தார். மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் வென்ற தங்களது கட்சியின் எம்.எல்.ஏ காமராஜை காணவில்லை எனவும், குதிரை பேரம் நடப்பதாக சந்தேகிப்பதாகவும் டி.டி.வி தினகரன் ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். 

இதையும் படிங்க: காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! ஒத்தி வைக்கணும்..! TTV தினகரன் வலியுறுத்தல்..!

விஜய் தங்களுக்கு 118 எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை எண்ணிக்கை இருப்பதாக ஆளுநர் மீண்டும் சந்தித்து கடிதம் கொடுத்துள்ள நிலையில் குதிரை பேரம் என எழுப்பப்பட்டுள்ள புகார் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.  விஜய்க்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், திடீரென குதிரை பேரம் நடப்பதாக புதிய குற்றச்சாட்டை டி.டி.வி.தினகரன் முன்வைத்தார். 

குதிரை பேரம் நடப்பது உண்மை என கண்டறியப்பட்டால் அதை காரணமாக வைத்து குதிரை பேரம் நடப்பதை தடுக்க ஆளுநர் சட்டசபையை முடக்க அதிகாரம் உண்டு என்பதால் பெரும் பரபரப்பு நிலவியது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கடிதத்தில் கையெழுத்திட்ட சிறிது நேரத்திலேயே காமராஜைக் காணவில்லை என்றும், குதிரைபேரம் அல்லது பெரும் தொகை கைமாறி இருக்கக்கூடும் என்றும் டி.டி.வி. தினகரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலும் தெரிவித்திருந்தார். 

மேலும் நேற்று நள்ளிரவில்  டிடிவி தினகரனுடன் ஆளுநர் மாளிகைக்கு வந்த அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் மாளிகை செயலாளர் இடம் இருந்து அழைப்பு வந்தது உடனே இங்கு வந்துவிட்டேன். நான் தவெகவிற்கு ஆதரவு என்றால் நானே வந்து இருப்பேன். தவெகவிடம் தான் பெரும்பான்மை இல்லையே அவர்கள் எப்படி ஆட்சி அமைக்க முடியும். எனக்கு தவெகவிற்கு செல்ல வேண்டும் என எந்த விருப்பமும் கிடையாது” என நேரில் வந்து பேட்டி கொடுத்தது தவெகவிற்கு அடுத்தடுத்து சிக்கலை அதிகரித்தது. 

இதையடுத்து டிடிவி தினகரன் சார்பில் சென்னை கிண்டி போலீசில் தவெக தலைவர் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிண்டி உதவி போலீஸ் கமிஷனரிடம் வழங்கப்பட்ட புகாரில் தவெக தலைவர் விஜய் மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் பெயரில் போலியாக ஆதரவு கடிதம் வழங்கி மோசடி செய்து ஆட்சியை பிடிக்க முயன்றுள்ளார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் ஆளுநருக்கு தவெக சார்பில் கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என டிடிவி தினகரன் புகாரளித்த நிலையில், காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்து கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம் நேற்று நள்ளிரவு வெளியிட்டது.  அந்த வீடியோவில் காரில் அமர்ந்த நிலையில் காமராஜ் கையெழுத்திடும் காட்சி உள்ளது, இந்த வீடியோவை எடுத்தது யார் எந்த இடத்தில் இந்த கையெழுத்து போடப்பட்டது போன்ற விவரங்கள் இல்லை என்றாலும், பரபரப்பான சூழ்நிலையில் இந்த வீடியோ வெளியானது முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share