×
 

ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

அதிமுக வேட்பாளர் STK ஜக்கையனை ஆதரித்து ஆ மா மு க பொதுச் செயலாளர் TTV. தினகரன் பேசி வாக்கு சேகரித்தார் 

 தமிழ்நாட்டில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை ஒழிப்பதற்கு, மீண்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கின்ற வகையில் அமைவதற்கு நீங்கள் 
வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை என்று கம்பம் நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளர் STK ஜக்கையனை ஆதரித்து ஆ மா மு க பொதுச் செயலாளர் TTV. தினகரன் பேசி வாக்கு சேகரித்தார் 

 கம்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் S.T.K.ஜக்கையன்  ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் TTV.தினகரன் கம்பம் நகரில் வடக்கு காவல் நிலையம் அருகில் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் .

 அப்போது பேசிய அவர் இன்றைக்கு திமுக ஆட்சியில தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் சட்டம்  ஒழுங்கே இல்லை என்கிற நிலை எங்கு பார்த்தாலும் கொலை, இன்றைக்கு கூட சென்னையில் பரீட்சைக்கு  படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி  கஞ்சா போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையான கும்பலால் சீரழிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார் என்பது வருந்தத்தக்கது 

இதையும் படிங்க: #BREAKING: அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

 தமிழ்நாட்டில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை ஒழிப்பதற்கு, மீண்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கின்ற வகையில் அமைவதற்கு நீங்கள் 
வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை .

 தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்று ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 உண்மையில் பாரதிய ஜனதா கட்சியோ, பாரதிய ஜனதா அரசாங்கமோ, மோடி அவர்களோ  இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களாக இருந்தால் ஈரான் போன்ற தீவிர இஸ்லாம் நாடுகள் இந்தியாவிற்கு எப்படி நட்புக்கரம் நீட்ட முடியும். அங்கு கடுமையாக போர் நடக்கின்ற போதும் ஹார்மோஸ் நீர் நிலையில் இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஈரான் இந்தியாவின் நட்பு நாடு என்கின்ற சொல்கிற அளவுக்கு மோடி அவர்களின் செயல்பாடு இருக்கின்றது.

 மோடி அவர்கள் இந்துத்துவாவிற்காக இஸ்லாமியர்களுக்கு எதிரானவராக இருந்திருந்தால், ஈரான் போன்ற நாடுகள் எப்படி நம்மளுங்க நட்பு கரம் நீட்டுவார்கள், குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் யாராவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் 

தேர்தல் வாக்குறுதி கூட நிறைவேற்றாத திமுக அரசு இப்படி மக்களை பிரித்து சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என்று கூறி ஏமாற்றி  தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

 இந்த ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது, சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படவில்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று தமிழ்நாடு ஒரு கொலைக்களமாக மாறிக்கொண்டிருக்கிறது.
 
 இதிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க அம்மா ஆட்சி கொண்டுவர நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்ன இரட்டை இலை சின்னம்.  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152  அடியாக உயர்த்துவதற்கு அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கடுமையாக போராடி தீர்ப்பை பெற்றார்கள்.  அதைக் கூட நிறைவேற்றாதவர்கள் திமுக காரர்கள் காரணம் கூட்டணி கேரள கம்யூனிஸ்களுடன் பிரச்சனை செய்தால் தமிழ்நாட்டில் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்பதற்காக  

 கம்பம் தொகுதி வளர்ச்சி அடைய  மற்றும் தேனி மாவட்டம் வளர்ச்சி அடைய அம்மா ஆட்சி மலர வேண்டும் என்றால்,  கம்பம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் STK.ஜக்கையன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார் 


   

இதையும் படிங்க: தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share