×
 

“NO WAY”... இபிஎஸ்ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது… TTV திட்டவட்டம்…!

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், தமிழக அரசியல் அரங்கில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அண்ணாமலை தலைமையில் பாஜக, அதிமுக, பட்டாளி மக்கள் கட்சி, ஓ. பன்னீர்செல்வம் குழு மற்றும் அமமுக ஆகியவற்றுடன் என்டிஏ கூட்டணியை வலுப்படுத்தியது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் 18.2% வாக்குகளைப் பெற்றது, இதில் அமமுகவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், 2025 செப்டம்பர் தொடக்கத்தில் அமமுக என்டிஏவில் இருந்து விலகியது. இதற்கு முக்கிய காரணம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பது. மேலும், அதிமுகவை தூக்கி பிடிக்கிறார்கள் என தினகரன் தெரிவித்தார். இபிஎஸ்-இன் தலைமையில் அதிமுக என்டிஏவில் இணைந்ததும், அமமுக மற்றும் ஓபிஎஸ் குழு புறக்கணிக்கப்பட்டதாக தினகரன் குற்றம் சாட்டினார். 

இந்த விலகலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தினகரன், அண்ணாமலை அனைவரையும் அரவணைத்து நடத்தினார் என்று கூறினார். அண்ணாமலை, தனது பதவி நீக்கத்திற்குப் பிறகும் பாஜகவின் முக்கிய அமைப்பாளராக இருந்து, தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். செப்டம்பர் 4-ஆம் தேதி, அவர் ஓபிஎஸ் மற்றும் தினகரனை சந்தித்து, என்டிஏவில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று வலியுறுத்தினார். கூட்டணி ஒருமித்த முடிவில் உருவானது. வாக்குவாதம் எவருக்கும் உதவாது. 2026-ல் திமுகவை வீழ்த்துவது முக்கியம்" என்று அவர் கூறினார். 

விரைவில் டிடிவி தினகரன் சந்திப்பேன் என்ற அண்ணாமலை கூறியிருந்த நிலையில், டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு நிகழ்ந்தது. சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் அண்ணாமலை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், கூறப்பட்டது.

இதையும் படிங்க: மீண்டும் NDA கூட்டணியில் தினகரன்? அண்ணாமலை - TTV திடீர் சந்திப்பு...

மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியதாக கூறிய நிலையில், டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் முடிவை பரிசீலிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: விஜய் இருக்க பயமேன்... டெல்லியை ஜெர்க்காக்கிய டிடிவி-யின் ‘டிசம்பர் பிளான்’...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share