ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்... தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் இணைந்து மரியாதை...!
ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் இணைந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழா தேவர் ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கர் தேவர் சிலைக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி, இன்று 118 ஆவது தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை ஒட்டி அவரது திருவருவ சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு ஓ. பன்னீர் செல்வமும் செங்கோட்டையனும் சேர்ந்து ஒரே காரில் பயணம் மேற்கொண்டனர். மதுரையில் இருந்து ஓபிஎஸ் காரில் ஏறி பசும்பொன் புறப்பட்டு சென்றார் செங்கோட்டையன். இந்த நிகழ்வு அரசியலில் பேசு பொருளாக மாறியது.
இதையடுத்து, பசும்பொன் அருகே ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சந்தித்தனர். பசும்பொன் செல்லும் வழியில் உள்ள நெடுங்குளம் என்ற இடத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, மூவர் ஆதரவாளர்களும் உற்சாகத்துடன் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டனர்.
இதையும் படிங்க: விரக்தியின் உச்சியில் இபிஎஸ்… பொய், துரோகம் தவிர வேற ஒன்னுமே இல்ல! பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்…!
தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் மூலம் ஒன்றிணைந்த அதன் மூலமாக அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ராவண தேசத்து மாமன்னனாக மாறிய இபிஎஸ்... நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறும் சிவ பக்தர்கள்...!