×
 

"தீயசக்தி திமுக"... சிறுவர்களை வைத்து பிரச்சாரம்... தவெக நிர்வாகி மீது FIR..!!

பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தியதாக தவெக நிர்வாகி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் தவெக முதன்முறையாக முழு அளவில் களமிறங்கியுள்ளது. மார்ச் 29 அன்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இதில் அவர் தானே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே பிரச்சாரப் பணிகள் தீவிரமடைந்தன. தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தியதாக தவெக நிர்வாகி தர்மேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸில் இருந்து விலகி ஆட்டோ ஓட்டுநர்கள்..! தவெகவில் ஐக்கியம்..!!

காரைக்குடி தொகுதியில் திமுக தீயசக்தி என கூறி சிறுவர்கள் பதாகைகளை ஏந்தி செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. குன்னம் தொகுதியில் நடந்த பிரச்சாரத்தில் நடந்த இந்த நிகழ்வை அடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு சட்ட கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது... தவெக பரப்புரையில் படு ஓபனாக பேசிய செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share