கொதிக்கும் டெல்லி..! மத்திய அரசின் கைது அப்பட்டமான தாக்குதல்... ஆதவ் அர்ஜுனா கண்டனம்.!
டெல்லி போராட்டத்தில் நடந்த கைது அப்பட்டமான தாக்குதல் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் இல்லம் நோக்கி பேரணையாக செல்ல காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர். சாலையில் அமர்ந்து காங்கிரஸ் ஆர் முழக்கங்களை எழுப்பினர்.
மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி கே சிவகுமார் உள்ளிட்டோரும் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டக் களமாக மாறி உள்ள டெல்லியில் மேலும் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டித்துள்ளார். நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது என்றும் தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவரானதுமே களேபரம்... வாண்டடாக அன்புமணி, சீமானை வம்பிழுத்த மாணிக்கம் தாகூர்...!
மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லி காவல்துறையால் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என கூறியுள்ளார். மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி எங்கே..?? போஸ்டர் அரசியலில் பாஜக..!! காங்கிரஸ் பதிலடி..!!