×
 

திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

பண்ணையார் தனம் தான் திமுகவின் தோல்விக்கு காரணம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை இணைத்து கூட்டணி அமைத்து இருப்பதாக தெரிவித்தார். எங்கு உண்மை இருக்கிறதோ அங்குதான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கட்சியினர் எடுக்கும் முடிவை திமுக எப்படி கேள்வி கேட்க முடியும் என்று கேட்டுள்ளார். திமுக காலத்தில் இருந்த முதலமைச்சர் குடும்ப நிதி என்பதை ஒழித்திருப்பதாக கூறியுள்ளார். திமுகவின் பண்ணையாறு மனநிலை தான் அவர்களின் தோல்விக்கு காரணம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுக தொடர்ந்து தோல்விகளை தேர்தல்களில் சந்தித்ததாக கூறியுள்ளார்.

திமுக அதிமுக இணைந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க நடந்த சூழ்ச்சியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி என் முடிவை ஏற்காததால் அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரையும் அதிமுக கோட்டை... விஜய் பக்கம் சாயும் எம்எல்ஏக்கள்..! பொன்னாடை போர்த்தி வரவேற்ற ஆதவ் அர்ஜுனா..!

யாரையும் ஆஃபர் கொடுத்து தமிழக வெற்றி கழகத்திற்கு அழைக்கவில்லை என்றும் அதிமுகவில் இருந்து வருபவர்களை அன்புடன் வரவேற்கும் இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் இருக்கிறது எனவும் கூறினார். உண்மையான எம்ஜிஆர் வழியில் நடப்பது தமிழக வெற்றிக்கழகம் தான் எனவும் உறுதிப்பட தெரிவித்தார். 90% அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்திற்கு வர தயாராகிவிட்டதாகவும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share