×
 

திருமாவுக்கு ‘குறி’... ஷாக்கில் திமுக - தகதகக்கும் தமிழக அரசியல் களம்!

திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்தாமல் தேர்தலைச் சந்தித்தால், அந்த தேர்தல் வெற்றியில் முடியாது என்பதை உறுதியாக நம்பும் எதிர்க்கட்சிகள் அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளன. 

கொள்கை ரீதியாகவும் தேர்தல் அரசியல் ரீதியாகவும் திமுகவிற்கு பக்கபலமாக திகழ்ந்து வருபவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். எப்படியாவது அவரை திமுக கூட்டணியில் இருந்து உடைத்து வெளியே கொண்டு வரவேண்டும் என ஓராண்டுக்கு முன்பு கட்சி ஆரம்பித்த விஜய் முதல் நாட்டையே ஆளும் பாஜக வரை கட்டம் போட்டு திட்டம் திட்டி வருகிறார்கள். 

ஆட்சியிலும் அதிகாரத்திலும்  பங்கு எனக்கூறி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா மூலமாக தூது அனுப்பியிருந்த நிலையில், தற்போது பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: எல்.முருகன், நயினார் நாகேந்திரனுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. அரசியல் அரங்கில் பரபரப்பு!!

இதையும் படிங்க: எல்.முருகன், நயினார் நாகேந்திரனுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. அரசியல் அரங்கில் பரபரப்பு!!

திமுக கூட்டணியில் எத்தனையோ கட்சிகள் இருக்க, திருமாவளவனை மட்டும் ஏன் இந்த கட்சிகள் குறிவைக்கின்றன. ஆனால் திருமாவளவனோ எத்தனை ஆசை வார்த்தைகள் கூறினாலும், அரசியல் தெளிவில்லாத விஜய் உடன் கூட்டணி கிடையாது என படு ஓபனாக அறிவித்துவிட்டார். அதேபோல் தான் பாஜட்கவை ஜனநாயக ஹ்விரோத சக்தி என்றும், அக்கட்சியுடன் எக்காரணம் கொண்டும் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில் தொடருவதில் விசிக உறுதியாக உள்ளது. திமுக அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றி வாகை சூட அதன் கூட்டணி கட்சிகளின் பலமே மிக முக்கிய காரணமாக உள்ளது. இதனை பல நேரங்களில் எதிர்க்கட்சிகளே வெளிப்படையாக தெரிவித்துள்ளன. இதையெல்லாம் மனதில் வைத்தே அதிமுக கூட்ட வலிமையான கூட்டணி அமைக்க போராடி வருகிறது. திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்தாமல் தேர்தலைச் சந்தித்தால், அந்த தேர்தல் வெற்றியில் முடியாது என்பதை உறுதியாக நம்பும் எதிர்க்கட்சிகள் அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளன. 

அதில் ஒரு பகுதியாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிர்க்கட்சிகள் குறிவைத்து வருகின்றன. வட தமிழகத்தில் பட்டியலின மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு தான் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

அதேபோல் திமுகவின் வாக்கு வங்கி உயர்வதற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இதனால் தான் திமுகவின் கூட்டணியில் இருந்து விசிகவை எப்படியாவது பிரித்து, தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் முதல் தேசிய அளவில் வளர்ந்து நிற்கும் பாஜக வரை துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறது. 

இதையும் படிங்க: திருமாவளவன் விரும்புவது இதைத்தான்... திமுக கூட்டணியில் குண்டை போட்ட நயினார் நாகேந்திரன்!!

இதையும் படிங்க: திருமாவளவன் விரும்புவது இதைத்தான்... திமுக கூட்டணியில் குண்டை போட்ட நயினார் நாகேந்திரன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share