பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம்..! அதிகார துஷ்பிரயோகம்... TVK அருண்ராஜ் ஆவேசம்..!!
பறக்கும்படை அதிகாரிகள் திமுகவிற்கு விசுவாசம் காட்டுவதாக தவெக அருண்ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம் காட்டுவதாகவும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நடந்து உள்ளதாகவும் தவெக கொள்கைப் பரப்புக் குழு செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான ரெய்டு நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்றும் அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை எனவும் முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் ரெய்டு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் M. வெற்றிவேல் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர் என்றும் சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி? கூட்டணி கட்சிகளை இறக்கலாமா? மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது என்று. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி!! மேல்மலையனூரில் பூஜை!! தேர்தலை சந்திக்க முழு மூச்சில் தயாராகும் விஜய்!