×
 
☰

சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

போதைப்பொருள் விவகாரத்தில் தவெக நிர்வாகி பூபாலன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

நாகை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகியாகப் பணியாற்றி வந்த வழக்கறிஞர் பூபாலன் வீட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மத்திய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து மெத்தம்பெட்டமைன் எனப்படும் ஆபத்தான போதைப்பொருளை கடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அக்டோபர் 16ஆம் தேதி காலையில் டெல்லியில் இருந்து வந்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு பூபாலனின் வீட்டில் தீவிர சோதனையைத் தொடங்கியது. சுமார் எட்டு மணி நேரம் நடந்த இந்த சோதனையின் போது வீட்டில் இருந்து 135 கிலோ அளவிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் நூறு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மெத்தம்பெட்டமைன் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட மிகவும் ஆபத்தான போதைப்பொருளாகக் கருதப்படுகிறது. இது இளைஞர்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.சோதனை முடிந்ததும் பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் ஆகிய இருவரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

இந்த சம்பவம் வெளியான உடனேயே தமிழக வெற்றிக் கழகம் விரைவாக நடவடிக்கை எடுத்தது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி பூபாலனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கியது. கட்சித் தலைமை இந்த விவகாரத்தில் தீவிர நிலைப்பாட்டை எடுத்து, அத்தகைய குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை பொறுத்துக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share