×
 

அடுத்தடுத்து திமுக தலையில் இறங்கும் பேரிடி... சேகர்பாபு, ஆ.ராசாவை அடுத்து சிக்கலில் சிக்கிய முக்கிய புள்ளி...!

கடலூர் காவல் நிலையங்களில் ஆ.ராசா, சேகர் பாபு,  வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு.

கடலூரில் தவெக வினர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர், தேவனாம்பட்டினம், கடலூர் முதுநகர் காவல் நிலையங்களில் தனித்தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி திமுக ஆர்ப்பாட்டத்தில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் முதலமைச்சரை மரியாதைக்குறைவாகவும், அவரது தோற்றம் குறித்து இரட்டை அர்த்தத்திலும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக புகார் மீது திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

சென்னை திமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் சென்னை துறைமுகம் பகுதி எம் எல் ஏ சேகர்பாபு முதலமைச்சரை ஒருமையில் இழிவாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நாங்க திமுக மாதிரி கிடையாது! தப்பு பண்ணினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்! அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

சைதாப்பேட்டை ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் மற்றும் நீலகிரி எம்பி ஆ.ராசா முதலமைச்சரை ஒருமையில் இழிவாகவும், அவரது பிறப்பு குறித்து பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாக புகார் மீது தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

ஆ.ராசா, சேகர்பாபு பேசியது என்ன? 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்பி ஆ. ராசா, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்தார். ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டாரா என கேள்வி எழுப்பிய நிர்மல் குமாரின் பிறப்பு குறித்தும் ஆ. ராசா சந்தேகம் எழுப்பும் வகையில் பேசினார்.

“பிரியங்கா காந்தி அவையில் இருக்கிறார். பாஜக தலைவர்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கிறார்கள். அடிபட்ட ராஜநாசியும் உட்கார்ந்திருக்கிறார். இவர்களுக்கெல்லாம் எமர்ஜென்சி தெரியாதா? மிசா பற்றி தெரியாதா?

இப்போது ஒருவர், ‘அவர் இதற்காகப் போகவில்லை, அதற்காகப் போகவில்லை’ என்று கூறுகிறார். எனக்கு சந்தேகம் இருக்கிறது. நீ யாருக்குப் பிறந்தாய்?” என்று அமைச்சர் நிர்மல் குமாரின் தாயாரை அவமதிக்கும் வகையில் ஆ. ராசா பேசியிருந்தார். 

அதேபோல், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவையில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத திறனற்றவர்கள் என ஆளுங்கட்சியினரை கடுமையாக விமர்சித்தார்.

“உனக்கு சட்டமன்றம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டாம். அடிபட்ட புலியாக திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு களத்தில் நின்று கொண்டிருக்கிறது” என ஒருமையில் விமர்சித்தார். 

முதலமைச்சருக்குரிய மாண்பை கடைப்பிடிக்க வேண்டும் என விஜய்க்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்திய நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளே தரம் தாழ்ந்து பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு! துரைமுருகன் பரபரப்பு அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share