காவலர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..! முதலமைச்சரின் காவல் விருதுகள் அறிவிப்பு..! சுதந்திர தின கொண்டாட்டத்தில் கவுரவிப்பு..!
சுதந்திர தினத்தை ஒட்டி முதலமைச்சரின் காவல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநில காவல்துறையினரின் அர்ப்பணிப்பையும் சிறப்பான பணியையும் அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இது மாநில அரசின் முக்கியமான மரபாக நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகிறது. காவல்துறையினர் மக்கள் பாதுகாப்பு, குற்ற விசாரணை, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பொது சேவை எனப் பல தளங்களில் ஆற்றும் பணியைப் பாராட்டி ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.சுதந்திர தினத்தை ஒட்டி வழங்கப்படும் முக்கிய பதக்கங்கள் இரண்டு வகைகளாக உள்ளன.
ஒன்று புலன் விசாரணையில் சிறப்பு பதக்கம். குற்ற வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை பெற்றுத் தருவதில் சிறப்பாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு இது வழங்கப்படுகிறது. குற்ற விசாரணையில் காட்டும் திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்வு செய்யப்படுகிறது. மற்றொன்று பொது சேவையில் சிறப்பு பதக்கம். மக்களுக்குத் தன்னலமற்ற சேவை ஆற்றுவதில், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில், சிறப்புப் பணிகளில் ஈடுபடுவதில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு இது வழங்கப்படுகிறது.
இந்தப் பதக்கங்கள் பெறுபவர்களுக்கு எட்டு கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகின்றன. பொதுவாகப் புலன் விசாரணைப் பதக்கம் சுமார் பத்து அதிகாரிகளுக்கும், பொது சேவைப் பதக்கம் சுமார் ஐந்து அதிகாரிகளுக்கும் வழங்கப்படுவது வழக்கம். டிஜிபி தலைமையிலான காவல்துறை தலைமை அலுவலகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் முதலமைச்சர் ஆணையிட்டு இந்தப் பதக்கங்கள் அறிவிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் முதலமைச்சர் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றிய 10 காவலர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல் அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 8 கிராம் தங்கம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசை முதல்வர் விஜய் வழங்க உள்ளார்.
திண்டுக்கல் காவல்துறை துணைத் தலைவர் மோகன், சென்னை எஸ்பி ஷண்முகப்பிரியா, துணை எஸ்பி மணிமொழியன், எஸ் ஐ மதன்மோகன், ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட கரூர் நகர காவல் நிலைய தலைமை காவலர் ரவிக்குமாருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் அழகுராஜ், திருச்சி துணை கண்காணிப்பாளர் தனுஷியாவுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தலைவர் கோமதி, நெல்லை துணை ஆணையர் விஜயகுமார், காவல் ஆய்வாளர்கள் சித்ரா, வினதா, மகாலட்சுமி ஆகியோருக்கு காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: போராடி, வாதாடி வாங்கிய தீர்ப்பையே கர்நாடகா மதிக்கல.! இவர் போனா நடக்குமா.? முதல்வரை விளாசிய இபிஎஸ்.!!