பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!
பழனி கோயில் நில விவகாரத்தில் திமுகவிற்கு குட்டு வைக்கப்பட்டுள்ளதாக தவெக விமர்சனம் செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் பழனி கோயில் நில விவகாரம் தொடர்பாக திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி சமூக வலைதள ஆதரவாளர்களைப் பயன்படுத்தி திட்டமிட்டு பொய்யான கதை உருவாக்கி பிரச்சாரம் செய்த திமுக நீதிமன்றத்தில் மூக்குடைபட்டு நின்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடப்பட்ட தவறான தகவல் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், “Prima facie false information” என நீதிபதியே பதிவு செய்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறியதற்கு எந்த நியாயமான ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.உண்மையைச் சரிபார்க்காமல் பதிவிட்ட திமுகவின் சமூக வலைதள ஆதரவாளரை வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரம் செய்த திமுகவுக்கு இது சம்மட்டி அடியாக அமைந்திருப்பதாகவும், மக்கள் மத்தியில் இனியும் கட்டுக்கதைகளைச் சொல்லி அரசியல் பிழைப்பு நடத்த முடியாது எனவும் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: என்னை பற்றி சட்டசபையில் பேசாதீங்க! மு.க.ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது? பின்னணியில் ஆதவ் அர்ஜூனா!
தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், பழனி கோயில் நில விவகாரம் தொடர்பாக திமுகவின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அமைச்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது நீதிமன்றத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளதாகக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: சீட் வாங்கி தருவதாக ரூ. 4 கோடி மோசடி..! சி. விஜயபாஸ்கர் மீது பகிரங்க குற்றச்சாட்டு.!