×
 

அதிரடிக்கு தயராகும் விஜய்!! மார்க்-8-ல் காத்திருக்கு சர்ப்ரைஸ்!! தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வாக்குறுதிகள்!!

தவெகவின் முழு தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி , இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெறலாம் என தெரிகிறது.

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தமிழக விடுதலை கட்சி (தவெக) வலுவான தேர்தல் அறிக்கையுடன் களமிறங்க தீவிரமாக தயாராகி வருகிறது. அக்கட்சியின் கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தக் குழு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று மக்கள், கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்கங்கள், அமைப்புகள், பெண்கள் சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் நேரடியாக கோரிக்கைகளைப் பெற்றது. 

இணையதளம் வழியாகவும் பொதுமக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோரிக்கைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஆராய்ந்து, மக்களின் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் ரகசிய சர்வே! திமுக திடீர் ப்ளான்!! அதிருப்தியில் உள்ள மகளிரை சமாதானப்படுத்த முயற்சி!

தவெக தலைமை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் முதல்கட்ட தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 8 உலக மகளிர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. இதில் இளைஞர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் 10 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழு அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி (லேப்டாப்/டேப்லெட்), இலவச இணைய சேவை உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் சார்ந்த வாக்குறுதிகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்டியலின மக்கள் மத்தியில் தவெக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், இந்த அறிக்கை மூலம் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பு வாக்காளர்களை ஈர்க்க தவெக திட்டமிட்டுள்ளது. கட்சியின் இளைஞர் அணி, மகளிர் அணி உறுப்பினர்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மார்ச் 8 அன்று வெளியாகும் முதல்கட்ட அறிக்கைக்குப் பிறகு முழு அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் இந்த அறிக்கையை “மக்களின் குரலாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தல் அறிக்கை தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலின சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நாதக சட்டசபைக்குள்ள போறது உறுதி! ஸ்கெட்ச் போட்டு தந்த சீமான்! தேர்தல் பணியில் மும்முரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share