×
 

திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

தூத்துக்குடி: வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 29 வயது பாலமுருகன் தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது ஜெயபால் தவெக நிர்வாகியாவார். இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள 33 வயது இளம்பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரு நாட்களுக்கு முன்பு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அந்தப் பெண்ணை தங்க வைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. மயக்கம் தெளிந்த பின்னர் அதிர்ச்சியடைந்த பெண், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் பிரச்சாரத்தில் பெண்கள் பாதுகாப்பைப் பேசிய விஜய், தன் கட்சியினரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபடுவதற்கு என்ன பதில் சொல்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுக பாதையில் பயணிப்பதா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவெக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? - டெல்லியில் பரபரப்பு மீட்டிங்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share