×
 

“விசில் ஊழலை ஒழிக்கும் சின்னம்!” தொண்டர்களை உற்சாகப்படுத்திய தளபதி விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை இன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்துள்ளது.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கட்சியின் தேர்தல் அரசியல் வரலாற்றில் இது முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது. இச்சின்னம் கிடைத்ததை முன்னிட்டு, கட்சியின் தலைவர் விஜய் தனது 'நெஞ்சில் குடியிருக்கும்' தொண்டர்களுக்கு உற்சாகமும் நெகிழ்ச்சியும் நிறைந்த அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

தமது அறிக்கையில் விசில் சின்னத்தின் முக்கியத்துவத்தை விஜய் பல கோணங்களில் விளக்கியுள்ளார். த.வெ.க ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கூறும் சின்னமாக விசில் அமைந்துள்ளது. மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருக்கும் விசில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய அடையாளமாகும்.
இலக்கை எட்டியவர்கள் எழுப்பும் பேரொலியாகவும், நேர்மறை நிகழ்வின் குறியீடாகவும் இது திகழ்கிறது.
ஊழலை ஒழித்து, நாட்டைப் பாதுகாப்பவர்களுக்கான வெற்றிச் சின்னமாக இது இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் களம் நோக்கி த.வெ.க: 2026 சட்டமன்றத் தேர்தலைத் தனது முதல் தேர்தல் அத்தியாயமாகச் சந்திக்கத் தயாராகி வரும் த.வெ.க, ஏற்கனவே இதற்காக 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்துள்ளது. பூத் ஏஜெண்டுகளை நியமித்தல் மற்றும் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். "வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்; விசில் போடுவோம் எனத் தனது அறிக்கையை அவர் விசில் போடு என்ற தனது பஞ்ச் வசனத்துடன் நிறைவு செய்துள்ளார். இந்த 'விசில்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள செய்தி, தமிழகம் முழுவதும் உள்ள அவரது லட்சக்கணக்கான தொண்டர்களிடையே பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: NDA கூட்டணிக்கு போவாருன்னு தெரியும்.. வெட்டத்தான் ஆடு வாங்குறாங்க! தினகரனை விமர்சித்த ஆதவ் அர்ஜூனா.. !


 

இதையும் படிங்க: தமிழக அரசியலில் புதிய திருப்பம்..!! தவெகவிற்கு பொதுச்சின்னம் கிடைக்குமா..?? டெல்லியிலிருந்து வந்த புதிய தகவல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share