#BREAKING: ஒரு MLA- வுக்கு 15 கோடி..? பேரம் பேசப்பட்ட எம்எல்ஏக்கள் யார்... யார்..? LIST எடுக்கும் தவெக தலைமை..!!
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களிடம் 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து “குதிரை பேரம்” என்பது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. மாற்றுக் கட்சியினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் விளக்கு வாங்குவதாக பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ-வை பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைய வேண்டும் என்று பேரம் பேசியதாக தெரிகிறது. சென்னையில் youtuber திருநாவுக்கரசு இல்லத்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்எல்ஏக்களுக்கு எவ்வளவு அட்வான்ஸ் கொடுக்க முடிவு என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் பேசப்பட்டது, யார் யாரிடம் பேரம் பேசப்பட்டது பற்றிய தகவல்கள் உள்ள ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்கள் கட்சி தாவுவதற்கு நபர் ஒருவருக்கு 15 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. 15 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசிய விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்கள் பத்திலிருந்து 12 பேரிடம் கட்சி மாறுவதற்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில் யார் யாரிடம் பேரம் பேசப்பட்டது என்பது குறித்த தகவலை சேகரிக்கும் நடவடிக்கையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா..? கோடிக்கணக்கில் பேரம்... செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிரடி ARREST..!
ஊத்தங்கரை எம்எல்ஏ மட்டும் புகார் அளித்த நிலையில் மற்றவர்கள் ஏன் புகார் தரவில்லை என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. தமிழக வெற்றி கழக எம்எல்ஏ ஒருவர் கூறிய தகவலில் திமுக பிரமுகர்கள் பேரம் பேசியது அம்பலமான நிலையில் எஞ்சியவர்கள் யார் என்றும் எதற்காக பேரம் பேசியதை தலைமைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அணுக் கனிம சுரங்கத்துக்கு அனுமதி நீட்டிப்பா..? விளைவு மோசமா இருக்கும்..! TTV தினகரன் கொந்தளிப்பு..!