×
 

திமுகவுக்கு ஷாக் கொடுத்த தவெக முக்கிய நிர்வாகி... விஜய் கரூர் விசிட் குறித்து வெளியானது பரபரப்பு தகவல்...!

தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் கரூரில் பேட்டி அளித்துள்ளார். 

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். இந்த வீடியோ கால் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர்.

இது தொடர்பாக கரூரில் அருண்ராஜ்  அளித்துள்ள பேட்டியில், கரூரை சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் எங்கள் கட்சித் தலைவர் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீங்கள் தைரியமாக இருங்கள்! தொடர்ந்து போராடுங்கள்! என்று அவருக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து விரைவில் விஜய் சந்திக்க உள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

இதையும் படிங்க: இதுதான் ப்ளான் மிஸ் பண்ணிடாதீங்க! இபிஎஸ்-யிடம் பாஜக தலைவர்கள் கொடுத்த ப்ளூ பிரிண்ட்!

திமுக அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை பலரும் விஜய் கரூருக்கு நேரில் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது தொடர்பாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் கரூர் செல்ல தயாராகி வருவது உறுதியாகியுள்ளது. 

இதையும் படிங்க: #karurstampede: நான் இருக்கேன்... கவலைப்படாதீங்க! ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த செந்தில் பாலாஜி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share