×
 

“இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்டாதீங்க”- மு.க.ஸ்டாலினுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த விஜய்...!

கடந்த வாரம் பிரசாரத்தின்போது பெரம்பலூர் செல்ல வேண்டியது. ஆனால், செல்ல முடியாமல், போனது. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நாகையில் தொண்டர்களிடையே உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக அரசு தனக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், முடக்க நினைப்பதாகவும் படு ஓபனாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், கடந்த வாரம் பிரசாரத்தின்போது பெரம்பலூர் செல்ல வேண்டியது. ஆனால், செல்ல முடியாமல், போனது. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் இந்த பிரசார திட்டத்தைப் போட்ட பிறகு, அது என்னப்பா சனிக்கிழமை, சனிக்கிழமை என கேள்வி எழுந்தது. அது ஒன்றும் இல்லை. உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது, உங்களது எந்த வேலைக்கும் தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் திட்டமிடப்பட்டது.

அரசியிலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா, அதனால்தான் ஓய்வு நாள்களாகப் பார்த்து திட்டமிடப்பட்டது. அங்கு அனுமதியில்லை, இங்க அனுமதியில்லை என எத்தனைக் கட்டுப்பாடுகள். அத்தனையும் சொத்தையான காரணங்கள்.

இதையும் படிங்க: “சி.எம். சார் மனசை தொட்டு சொல்லுங்க”... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - வெளுத்து வாங்கிய விஜய்...! 

5 நிமிடம்தான் பேச வேண்டும், 10 நிமிடம்தான் பேச வேண்டும் எனக் கட்டுப்பாடு, நான் பேசுவதே 3 நிமிடம்தான், அதிலும் இதைப் பேசக் கூடாது, அதைப் பேசக் கூடாது. நான் அரியலூர் செல்லும்போது அங்கு மின் தடை. திருச்சியில் பேசத் தொடங்கியபோது மைக் ஒயர் கட். இப்படி பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன என விஜய் கூறினார்.

அதற்கும் மேல், பேருந்துக்குள்ளேயே இருக்க வேண்டுமாம், கையை இப்படியே வைத்துக் கொள்ள வேண்டுமாம், கையை அசைக்கக் கூடாதாம். சிரிக்கக் கூடாதாம், மக்களைப் பார்த்து கையசைக்கக் கூடாது என கட்டுப்பாடுகள். நான் என்னவோ, ஏதோ என்று நினைத்தேன். ஆனால், நகைச்சவையாக இருக்கிறது. அதையும் நான் ரசிக்கிறேன். நேரடியாகவே கேட்கிறேன், மிரட்டிப் பார்க்கிறீர்களா? என விஜய் கேட்டுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், இனியும் எனக்கு தடை போட்டால், நேரடியாக மக்களிடம் சென்றுவிடுவேன். மக்களே நீங்களே சொல்லுங்க. நான் உங்களை பார்க்க வரக்கூடாதா? உங்களுடன் பேசக்கூடாதா?, உங்கள் குறைகளைக் கேட்கக்கூடாதா? உங்களுக்காக குரல் கொடுக்கக்கூடாதா? என அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினார். இப்படி நமக்கு தடையாய் போடுற இந்த திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? என்ற கேள்வி வேண்டாம் என்றும், மக்களுக்காக போராடும் நம்ப டிவிகே ஆட்சிக்கு வரவேண்டுமா? என்ற கேள்வி ஆமாம் என்றும் தொண்டர்கள் விண்ணதிர பதிலளித்தனர். 

இதையும் படிங்க: விஜய் இப்படி செய்வாருன்னு நினைக்கவே இல்ல... அதிருப்தியுடன் திருப்பிச் சென்ற தொண்டர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share