விடிந்ததுமே விஜய்க்கு பேரதிர்ச்சி... தவெகவினர் 6 பேர் கொத்தாக கைது... ஓவர் அட்ராசிட்டிக்கு ஆப்பு வைத்த போலீஸ்...!
இராமநாதபுரம் கொட்டும் மழையில் திறந்த வாகனத்தில் விசில் அடித்து பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய தவெக இளைஞர்கள் கைது
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி நடைபெற்ற நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைக் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் கார் மீது அமர்ந்து கத்திக்கொண்டே பயணிப்பது, பைக்கில் ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக செல்வது, பொது இடங்களில் டிவிகே, டிவிகே என கோஷமிடுவது, பொது இடங்களில் விஜய் பாட்டிற்கு ஆண், பெண் தொண்டர்கள் இணைந்து நடனமாடுவது என மோசமான செயல்களில் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் முறையில் பொது மக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் காரில் தொங்கிய விசில் அடித்துக் கொண்டு சென்ற 12 மீது நபர்கள் மீது கேணிக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பலத்த மழை பெய்து வருவதையும் பொருட்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினர் திறந்த நிலையில் ஆபத்தான முறையில் காரை ஓட்டி தவெக துண்டை சுற்றி விசில் அடித்து பேருந்துகளுக்கு முன்பாக ஆட்டம் போட்டு “டிவிகே...டிவிகே” என கத்தி அலப்பறையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திக்..திக்.. திருப்பம்...!! - 106 எம்.எல்.ஏ.க்களை சந்தித்த விஜய்... சூசகமாக சொன்ன முக்கிய தகவல்... அந்த கட்சியுடன் கூட்டணி கன்பார்ம்?
நகரின் பல்வேறு இடங்களிலும் இதே காரில் மேற்படி நபர்கள் விசில் அடித்து அட்ராசிட்டியில் ஈடுபட்டு வந்த 12 அவர்கள் மீது கேனக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் .சட்ட ஒழுங்கு சீர் கெடுக்கும் வகையில்மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஆபத்தான முறையில் பயணம் செய்து செய்த முறையிலும் ஈடுபட்டு வந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 12 நபர்கள் மீது கேணிக்கருக்காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையில் கார் மீது அமர்ந்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் 6 பேரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!