கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!
தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என கர்நாடக அரசு தெளிவாக இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு ஆப்ஷன் உச்சநீதிமன்றம் தான்
நெல்லையில் நடைபெற்ற தனியார் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் நெல்லை வருகை தந்தார். விருந்தினர் மாளிகையில் வைத்து அவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் வரவேற்று சால்வை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, கல்லூரி நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறேன். மின்சார கட்டண உயர்வு என்று மூன்று லட்சம் புகார்கள் வந்திருப்பதாக தவறான தகவலை திமுகவில் தெரிவித்துள்ளார்கள்.
முந்தைய காலங்களில் கோடைகாலம் முடிந்த பிறகு அதிக அளவில் கட்டணம் உயர்வு தொடர்பாக புகார்கள் வந்திருக்கிறது.மூன்று லட்சத்து 70 ஆயிரம் புகார்கள் வந்திருப்பது எனக்கு கூறப்படுவது தவறான தகவல்.திமுக தலைவர் தவறான தகவலை கூறிவிட்டார். அதை அவர் திரும்ப பெற வேண்டும். ரீடிங்கை பொருத்துதான் மின்சார கட்டணங்கள் வருகிறது. கோடைக்காலத்தில் யூசேஜ் அதிகமாக இருப்பதால் கட்டணம் அதிகமாக வந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!
பொதுமக்களுக்கு விளக்கத்தை கொடுப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் இப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். திமுக தலைவர் எங்களை கேட்கலாம்.நமக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கர்நாடக அரசு 200 ஆண்டுகள் தெளிவாக இருக்கிறார்கள்.
1974 இல் அந்த அக்ரிமண்டை நாம் மிஸ்சிங் செய்து விட்டோம்.நமக்கு இருக்கக்கூடிய ஒரே ஆப்சன் உச்சநீதிமன்றம் மட்டும்தான்.கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். ஒன்றிய அரசின் அமைச்சருக்கும் இதில் தெளிவு இல்லை.நீதிமன்றத்தின் மூலமாகத்தான் இந்த பிரச்சனையை அணுக முடியும்.
மாநிலங்கள் இதே காவேரி பிரச்சனையை எதுவும் செய்ய முடியாது ஒன்றிய அரசுதான் செய்ய வேண்டும்.அன்புமணி காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பொழுது கெசட் வரும் பொழுது என்ன செய்து கொண்டிருந்தார்.
கர்நாடகா அரசு குறியாக இருக்கிறது தண்ணீர் நமக்கு வழங்கக் கூடாது என்று.மின்சாரத் துறையில் பணியாளர் பற்றாக்குறைகள் இருக்கிறது. விரைந்து பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தைக்கு தமிழக வெற்றிக்கழக அரசு அழைப்பது மடமைத்தனம் என்று சீமான் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்காமல் சென்றார்.
இதையும் படிங்க: 7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!