ஆளுநர் மாளிகைக்குள்ள இருக்குற வேலையை மட்டும் பார்த்தா போதும்... அர்லேகரை எச்சரித்த நிர்மல் குமார்...!
எடப்பாடி, ஸ்டாலின் ஆகியோரின் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கிருந்து விலகி தவெகவில் இணைகின்றனர்.
மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், அரசின் திட்டங்களை ஆய்வு செய்வது கவர்னருக்கு தேவையில்லாத விஷயம். அவருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநர் மாளிகை களமிறங்கி என்ன செய்ய முடியும்? மாளிகைக்குள் என்ன வேலை இருக்கிறதோ அதை மட்டும் அவர் செய்தால் போதும்.
வைகை ஆற்றை துர்வாருவதற்கான சுற்றுசூழல் அனுமதி மத்திய அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. வந்ததும் பணிகளை தொடர்வோம். ஆளுநர் களமிறங்கி மண்வெட்டி எடுத்து வேலை செய்வாரா?. எடப்பாடி, ஸ்டாலின் ஆகியோரின் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கிருந்து விலகி தவெகவில் இணைகின்றனர்.
குதிரை பேரத்தில் ஈடுபடுவது ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தான். எந்த தைரியத்தில் ஆட்சி நீடிக்காது என்று ஸ்டாலின் சொல்கிறார்?. எங்கள் ஆட்சி அமைந்த இந்த 30 நாட்களில் ஸ்டாலின் மாபெரும் தலைவராகி விட்டாரா? அவர் மீதான நன்மதிப்பை தான் மக்கள் கொளத்தூரில் காட்டினர். யாராலும் எங்கள் எம்.எல்.ஏ.வை நெருங்க முடியாது. குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற திமுக முயல்கிறது.
இதையும் படிங்க: நிர்மல்குமார் உத்தமபுத்திரனா?... தவெகவுக்கு முட்டுக்கொடுத்ததே திமுக தான்... அடித்து நொறுக்கிய ரகுபதி...!
கரூர் விபத்து எப்படி நடந்தது என எல்லோருக்கும் தெரியும். 41 பேரின் மரணத்திற்கு காரணம் செந்தில்பாலாஜி தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வைத்துக்கொண்டே நயினார் நாகேந்திரன் சொன்னார்.
முதல்வர் விஜயின் தனிப்பட்ட விஷயம் தொடர்பாக ஒருமையில், கீழ்த்தரமாக பேசினார் அனிதா ராதாகிருஷ்ணன். அவர் பேசியதை எந்த மனிதர்களும் ஏற்க முடியாது. அவர் பேசியதை அவர் குடும்பத்தினராலே ஏற்க முடியாது. மத்திய அரசு, ஆளுநர் என எந்த அழுத்தத்துக்கும் இந்த அரசு அடிபணியாது. முதலமைச்சர் விஜய் யாருக்கும் compramise செய்ய மாட்டார்.
ஆளுநரின் தலையீடு பற்றி முதல் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு, எல்லாவற்றிற்கும் முதல்வர் பேச வேண்டிய அவசியமில்லை. நாங்கள் அவர் சார்பாக பேசி கொண்டிருக்கிறோம்.
இதையும் படிங்க: குறுக்கு வழி..! திமுக, அதிமுக, பாஜக கூட்டுசதி..! அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு..!