மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!
ராமநாதபுரத்தில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்க்கச் சென்ற அமைச்சர், விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏ (A) சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படத்தைப் பார்க்க தனது குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களையும் அழைத்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'ஏ' (A) சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படத்தில் வன்முறை மற்றும் இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் தனது குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களை அருகில் அமரவைத்து திரைப்படம் பார்த்ததாக கூறப்படுகிறது.
ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படத்திற்கு 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை அழைத்துச் சென்றதன் மூலம் அமைச்சர் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஜனநாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் நகரில் உள்ள டி சினிமாஸ் திரையரங்கில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ், தனது குடும்பத்தினருடன் திரைப்படத்தைப் பார்த்தார்.
இதையும் படிங்க: “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!
அப்போது, அவருடன் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களும் திரையரங்கிற்குள் சென்றதாகக் கூறப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படத்திற்கு சிறுவர்களை அழைத்துச் சென்றதாக அமைச்சர் ராஜீவ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் அமைச்சர் ராஜீவ், தற்போது மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படத்திற்கு 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ரோகினி தியேட்டரில் பரபரப்பு... நீட்டை ஒழிக்கணும்... போராடிய இளைஞரை கைது செய்த போலீஸ்..!!