×
 

இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த மூவருக்கு, எந்த பதவி வேண்டும் என்பதை முடிவு செய்ய, அவகாசம் தரப்பட்டுள்ளதாக, த.வெ.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை: அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.,) இணைந்துள்ள மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு எந்தப் பதவி வேண்டும் என்பதை முடிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது த.வெ.க.,வுக்குள் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். இவர்கள் மூவரும் இடைத்தேர்தலில் அதே தொகுதியில் சீட் கேட்டதோடு, வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியும் வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் த.வெ.க., மேலிடம் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஏற்கவில்லை.

த.வெ.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்ததாவது: “இடைத்தேர்தலில் சீட் வழங்குவது குறித்து சர்வே அடிப்படையில் முடிவு செய்யப்படும். தேர்தலுக்கு முன்பே அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக மாவட்டச் செயலர்களிடம் பேசியபோது யாரும் வர தயாராக இல்லை. ஆனால் தற்போது அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி ஆதவ் அர்ஜுன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. தேர்தலில் செலவழித்த பணத்தை ஈடுகட்ட த.வெ.க., ஒப்புக்கொண்டுள்ளது” என்றனர்.

இதையும் படிங்க: எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

மூன்று எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் சீட் கேட்ட நிலையில், த.வெ.க., தலைமை “சர்வே முடிவுகளின் அடிப்படையில் சீட் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளது. இதனால் சீட் கிடைக்காவிட்டால் என்ன செய்வது எனும் குழப்பத்தில் அவர்கள் வாரியத் தலைவர் பதவி உள்ளிட்டவற்றைப் பற்றியும் யோசித்து வருகின்றனர். த.வெ.க., தலைமை அவர்களுக்கு முடிவெடுக்க அவகாசம் அளித்துள்ளது.

இதேபோல் அதிமுகவில் இருந்து மேலும் இரு முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏழு எம்.எல்.ஏ.க்களுடன் த.வெ.க., தரப்பு பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால், அதிமுகவின் உடைவு மேலும் அதிகரிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். த.வெ.க., தனிப்பெரும்பான்மைக்கு நெருங்கும் முயற்சியாக இந்த நகர்வுகள் பார்க்கப்படுகின்றன.

இதையும் படிங்க: எஞ்சிய எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பது எப்படி?! ஆதரவு நிர்வாகிகளுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share