ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்விட்டா.? தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்துகள்.? வலுக்கும் விமர்சனம்..!!
தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்துகள் தயாராகி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
தமிழகத்தின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் புதிய மாற்றங்கள் அறிமுகமாகி வரும் நிலையில், சென்னை மெட்ரோபாலிட்டன் போக்குவரத்துக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் புதிய மினி பேருந்துகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பேருந்துகள் மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த துடிப்பான நிறங்களில் வடிவமைக்கப்பட்டு வருவது, பொதுமக்களிடையே பாராட்டுகளையும், சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் எனும் ஆளும் கட்சியின் கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு இந்த பேருந்துகளில் பிரதிபலிப்பது தற்செயலா அல்லது திட்டமிட்டதா எனும் விவாதம் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, 300 புதிய பேருந்துகளை உள்ளடக்கியது.
இதில் டீசல் மற்றும் சி.என்.ஜி. மாடல்கள் அடங்கியுள்ளன. கடைசி மைல் இணைப்புக்காகவும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் இந்த மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ரூ. 127 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனங்கள், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்கவும் நோக்கம் கொண்டவை. புதிய நிற வடிவமைப்பு புதுமையான தோற்றத்தை அளிப்பதாக பலர் வரவேற்கின்றனர்.
இதையும் படிங்க: "அடக்குமுறை"..! மார்க்கண்டேயனை வழக்கறிஞர் கூட சந்திக்க அனுமதி மறுப்பு.. கீதாஜீவன் கண்டனம்.!
எனினும், இந்த நிறத் தேர்வு பலரது கவனத்தை ஈர்த்த முக்கிய காரணம், தவெகவின் கொடியுடன் உள்ள ஒற்றுமை. தவெகவின் கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆளும் கட்சியின் ஆட்சியில் அரசு வாகனங்கள் இந்த நிறங்களில் தயாராவது, அரசியல் ரீதியான முன்னுரிமையை காட்டுகிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது. “இனி தமிழக அரசின் அத்தனை திட்டங்களிலும் மஞ்சள்-சிவப்பு முன்னுரிமை பெறுமா?” என்ற விவாதங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. சிலர் இதை அரசின் பிராண்டிங் என்று கருதினாலும், மற்றவர்கள் இது பொதுச் சொத்தை அரசியல் நிறங்களுடன் இணைப்பது என்று விமர்சிக்கின்றனர்.
இதையும் படிங்க: EX. MLA- வுக்கே இந்த நிலைமையா..? 5 நாளாக POWER CUT..! நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!