×
 

"விஜய் பெரம்பூரில் போட்டியிட வேண்டும்!" - தவெக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

தமிழக வெற்றிக் கழகத்தின்  பெரம்பூர் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னை பெரம்பூரில் இன்று மிக ஆவேசமாக நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் நீண்டநாள் விருப்பமாக, தவெக தலைவர் விஜய் இந்தத் தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் எனத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதனை ஆதவ் அர்ஜுனா வழிமொழிந்த நிலையில், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் இது அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது.

தலைவர் விஜய்யிடம் அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கேட்கப்பட்ட போது, "எங்கு வறுமை மற்றும் ஏழ்மை அதிகமாக உள்ளதோ, எங்கு வளர்ச்சி இல்லையோ, எங்கு குடிசைப் பகுதிகள் அதிகம் உள்ளதோ மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறைவாக உள்ளதோ, அங்கேயே போட்டியிட்டு அந்த இடத்தை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்டுவேன்" என்று அவர் கூறியதாக நிர்வாகிகள் மேடையில் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: "எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் தமிழகத்தை ஆளப்போகும் ஒரே சக்தி விஜய் தான்!" பெரம்பூரில் தவெக அதிரடி!

வறுமை மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள வடசென்னையின் ஒரு தொகுதியிலேயே விஜய் களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெரம்பூர் தொகுதியில் நிலவும் குடிசைப் பகுதி சிக்கல்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி அவர் இங்குப் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பெரம்பூர் நாளை தமிழகத்தின் வரலாறாக மாறும்; இங்குள்ள ஆற்றல் மிக்க சக்திகளாக இருக்கக்கூடிய நிர்வாகிகளின் விருப்பத்தைப் பொதுச் செயலாளர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன் என நிர்வாகிகள் உற்சாகத்துடன் பேசினர்.

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாவட்டக் கூட்டத்திலேயே விஜய்யின் தொகுதி குறித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் வடசென்னையில் விஜய் களம் இறங்குவார் என்ற அறிவிப்பு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இப்போதே சூடாக்கியுள்ளது.


 

இதையும் படிங்க: த.வெ.க விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவு... N. ஆனந்த் முன்னிலையில் குவிந்த நிர்வாகிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share