”அவரு ஜெயிச்சி ஆட்சிக்கு வரப்போறது கிடையாது”... சீமானை எகிறி அடித்த செங்கோட்டையன்... நாதக டோட்டல் டெமேஜ்...!
எம்ஜிஆர் இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர் அதற்குப் பிறகு ஜெயலலிதா வந்தார். அதன் பின் ஆட்சியை கண்டவர்கள் ஜெயலலிதாவிற்கு பிறகு அவரால் வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள், தனியாக வெற்றி பெற முடியவில்லை.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன். நல்ல வரவேற்பு அளிக்கின்றனர். விஜய்க்கு மற்ற தலைவர்களுக்கு இல்லாத அளவிற்கு கூட்டம் வருகிறது. பணம் கொடுக்காமல் கூட்டம் வருகிறது. திருச்சியில் ஒரு லட்சம் பேர் வந்தார்கள். இது இந்தியாவே வியக்கத்தக்க வகையில் இருப்பதை உணர முடிகிறது. காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு யுகங்களை வகுத்தாலும், அவர்கள் தடுமாறும் நிலை இருந்தது இது போன்ற நிலை இந்தியாவில் யாருக்கும் ஏற்பட்டதில்லை. எல்லோரும் மாற்றத்தை விரும்புகின்றனர். எம்ஜிஆர் இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர் அதற்குப் பிறகு ஜெயலலிதா வந்தார். அதன் பின் ஆட்சியை கண்டவர்கள் ஜெயலலிதாவிற்கு பிறகு அவரால் வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள், தனியாக வெற்றி பெற முடியவில்லை.
பத்து முறை தோல்வியை தழுவி இருக்கிறார்கள். திமுகவை வீழ்த்த ஒரே சக்தி தான் முடியும். அதுவும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களால்தான் முடியும். வேறு யாராலும் முடியாது. இதுதான் உண்மையான நிலை, திருச்சியில் கீழே இறங்கி மக்களை சந்திக்க வேண்டும் என விஜய் விரும்பினார். ஆனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை உள்ளது. அவரின் இளைஞர்களின் ஆர்வத்தையும் வேகத்தையும் தடுக்க முடியவில்லை. எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிறகு விஜய்க்கு மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார்.
கோபிசெட்டிபாளையத்தில் இரண்டு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றேன். 2017 ஆட்சியில் இருக்கும் போது கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக பிரிக்கலாம் என கேட்டபோது மற்ற மாவட்டங்களும் இது போல் இருக்கிறது என காரணம் காட்டி காலத்தை வீணடித்து விட்டார்கள். விஜய் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் அவர் வகுக்கும் யூகத்தின் அடிப்படையில் பணிகள் இருக்கும். ஈரோடு மாவட்டத்தை தனியாக பிரித்து கோபிசெட்டிபாளையம் மாவட்ட தலைநகரம் ஆக்கி தனி மாவட்டமாக உருவாக்கப்படும். புறவழிச் சாலை அமைக்கப்படும் ஏற்கனவே ஆய்வுப் பணிகள் முடிந்தும் நிதிகள் ஒதுக்காததால் பணிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆறு மாத காலத்தில் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும். கொடிவேரி அணைக்கு அருகில் சாயப்பட்டறை அனுமதி பெற்று தொடங்கிய போதும் அதனை தடுத்து நிறுத்தினோம். எடப்பாடி அவர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் அத்திக்கடவு அவினாசி திட்டம் வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் இந்த திட்டம் ஜெயலலிதா காலத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: “உன்ன எவன்டா வர சொன்னா...” - விஜயை ஒருமையில் சாடிய சீமான்... ஷாக்கில் தவெக தொண்டர்கள்...!
காலிங்கராயன் அணைக்கட்டு அருகே உபரி நீர் வரும்பொழுது அதில் இருந்து தண்ணீர் எடுக்கலாம் என ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது ஜெயலலிதாவால் நாங்கள் ஆட்சியில் அமர்ந்த பிறகு அந்த திட்டத்தை ஆய்வு செய்தோம் திட்டத்தை முடித்தோம். அமைச்சராக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்யாததையா இனிமேல் செய்யப் போகிறார் என சீமான் கேட்கிறாரே.? என்ற கேள்விக்கு, சீமான் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அவரை பற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஒன்பது முறை ஆட்சிக்கு இருந்தபோது ஆட்சி அதிகாரம் யார் தலைமையில் இருக்கிறதோ அவர்கள் என்ன முடிவை எடுக்கிறார்களோ அதனை ஏற்றுத்தான் இயங்கி ஆக வேண்டும். தனிப்பட்ட முறையில் கருத்துக்களை சொல்லி விமர்சனம் செய்ய விரும்பவில்லை. தவெகவில் அதனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழக வெற்றி கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுகவில் பொதுச் செயலாளராக, முதல்வராக நாங்கள் உருவாக்கியவர் என்னை தூக்கி எறிந்தார். எல்லோருக்கும் ஆளுமை அந்தஸ்து தகுதி இருக்கிறது. ஆனாலும் ஒருவரை பொதுச் செயலாளராக ஆக்கினோம். அதற்குப் பிறகு என்னை தூக்கி எறிந்தார்கள்.
திருச்சியில் விஜய் கூட்டத்திற்கு காவல்துறையினர் முழுமையாக பாதுகாப்பு அளித்தனர். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த கூட்டம் குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம். அனுமதி பெறுவதில் சிக்கல் இருக்கிறது ஆகையினால் கூட்டத்தை தேதி அறிவித்து செயல்படுத்த முடியவில்லை. எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இல்லை என்று யாரையும் கூற முடியாது சுயேட்சையாக கூட குடியரசுத் தலைவருக்கு போட்டியிடுகிறார்கள்.
முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, தனபால் மகனுக்கு தமிழக வெற்றி கழகத்தில் வாய்ப்பு வழங்கி உள்ளோம். தனபாலை பொருத்தவரை அவருக்கு அதிமுக.வில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த இயக்கத்தை இரண்டு முறை காப்பாற்றியவர் அவர். இயக்கத்திற்கு சோதனை வந்தபோது ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை காப்பாற்றியவர், அவருக்கே இடம் இல்லை என்றால் அதிமுகவில் எப்படி ஒரு நிலை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பணம் இருந்தால் மட்டும்தான் அங்கு வேட்பாளராக இடம் கிடைக்கும். எவ்வளவு நிதி வைத்திருக்கிறீர்கள் என்று டிமாண்ட் செய்து கேட்கிறார்கள், மற்ற கட்சிகளில் இவ்வாறு கேட்பதில்லை.
இதையும் படிங்க: “கேடுகெட்ட கூட்டத்திடம் நாடு சிக்கி தவிக்குதுய்யா” ..! திமுக அடிமை-னு சொல்ல பெருமையா.? பல்லடத்தில் சீமான் பரப்புரை..!