எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!
திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் நன்றி தெரிவிக்க செல்லும் நிலையில் எம்ஜிஆர் உடன் விஜய் இருப்பது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது பேசப்பொருளாக மாறி உள்ளது.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், இன்று திருச்சி சென்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். இந்த வருகையை முன்னிட்டு திருச்சி நகரம் முழுவதும் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, முதல்வர் விஜய்யை வரவேற்கும் பேனர்களில் எம்.ஜி.ஆர். உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பதும், ஒரு பேனரில் எம்.ஜி.ஆர். விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்த விஜய், அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோசப் கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்துகிறார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு நகரம் முழுவதும் விஜய்யின் கட்-அவுட்கள், கொடிகள், பேனர்கள் நிறைந்துள்ளன. இதில் பல பேனர்களில் விஜய்யும் எம்.ஜி.ஆரும் இணைந்து தோன்றுவது போன்ற புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பேனரில் எம்.ஜி.ஆர். விஜய்க்கு செங்கோல் அளிப்பது போன்ற சின்னம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேனர்கள் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தொடர்ந்து உறுப்பினர்கள் இணைந்து வரும் பின்னணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு
தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக ஆட்சி அமைத்த நிலையில், அதிமுகவில் இருந்து நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த இணைப்புகளை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விஜய்யுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்கள் இடம்பெற்ற பேனர்கள் வைக்கப்பட்டன. திருச்சியிலும் இதே போக்கு தொடர்வது இயல்பான அரசியல் உத்தியாகத் தெரிகிறது. செங்கோல் சின்னம் தமிழக அரசியலில் அதிகாரத்தையும் பாரம்பரியத்தையும் குறிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: தலைமைச்செயலக வரலாற்றிலேயே முதல் முறை... ஸ்ட்ரிக்ட்டாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்...!