#BREAKING: தூத்துக்குடி தவெக-வில் திருப்பம்! பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் போராட்டம்; சாமுவேல் ராஜை நியமித்த விஜய்!
தவெக அலுவலகம் முன்பு அஜிதா ஆக்னல் தர்ணாவில் ஈடுபட்டுவரும் நிலையில், சாமுவேல் ராஜ் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி நியமனங்கள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் நியமன விவகாரம் இன்று பனையூர் கட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டச் செயலாளர் பதவி கேட்டுப் பெண் நிர்வாகி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவரைப் பொருட்படுத்தாமல் புதிய நிர்வாகிகளை நியமித்து விஜய் அதிரடி காட்டியுள்ளார்.
தூத்துக்குடி மத்திய மாவட்டத் தவெக செயலாளராகச் சாமுவேல் ராஜ் என்பவரைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, தன்னைத் தான் மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டும் எனக் கோரி, தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் இன்று காலை முதல் பனையூரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரமாக அவர் போராட்டம் நடத்தியும், கட்சித் தலைமை அவரிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மாறாக, அஜிதாவின் போராட்டத்தைப் பொருட்படுத்தாமல், சாமுவேல் ராஜை மாவட்டச் செயலாளராக அறிவித்து விஜய் தனது அரசியல் போக்கினை வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய அறிவிப்பின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்டத் தவெக இணைச் செயலாளராகக் கோல்டன், பொருளாளராகச் சிவக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், துணைச் செயலாளர்களாக விஜி மற்றும் மரிய கிராஸியா பெர்லின்சியா ஆகியோர் நியமிக்கப்பட்டு மாவட்டக் குழு முழுமையடைந்துள்ளது. "விதிமுறைகளுக்கும், தகுதிகளுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும், அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டோம்" என்பதை இந்த அதிரடி நியமனத்தின் மூலம் விஜய் தனது கட்சியினருக்கு என உணர்த்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தத் திடீர் நியமனமும், பெண் நிர்வாகியின் போராட்டமும் தூத்துக்குடி தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம் ஏன்?" - நடிகை கஸ்தூரி காரசாரமான கேள்வி!
இதையும் படிங்க: "திமுக ஏவிவிடும் பூனையாக மாறிவிட்டார் திருமாவளவன்!" - விசிக-வை அடகு வைத்துவிட்டதாக விமர்சித்த நிர்மல்குமார்!