Breaking: திருவண்ணாமலை தீபத் திருவிழா: நகருக்குள் இருசக்கர வாகனங்களுக்குத் தடை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது நாளை (டிச. 3) கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று நிலையில், இருசக்கர வாகனங்கள் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை மீது நாளை (டிசம்பர் 3) மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தீபத் திருவிழாவைக் காண இன்று முதலே பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு, நாளை முதல் திருவண்ணாமலை நகருக்குள் இருசக்கர வாகனங்கள் வருவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் இந்த 3 நாட்களுக்கு, திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடரும் கனமழை!
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் அவசரத் தேவைக்காக 50 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ்கள் சிரமமின்றிச் சென்று வர ஏதுவாக, தனிப்பாதை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் முடிக்கப்பட்டுள்ளன.
நாளை மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்படும் நிலையில், பக்தர்கள் அனைவரும் காவல் துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பாகத் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை வாக்காளர் நீக்கம்: SIR திருத்தப் பணியால் 10 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு.. மாவட்ட நிர்வாகம் தகவல்!